[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 09:40.12 PM GMT ]
ஜனாதிபதியின் தவணைக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு வரையறுப்பது, பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைப்பது மற்றும் நாடாளுமன்றம் நாலரை ஆண்டுகளில் தானாக விரும்பிக் கோராத பட்சத்தில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கமுடியாது ஆகியன உள்ளிட்ட அதிகாரக் குறைப்புகள் 19-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான வரைவில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே, ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குக் கொண்டுவரப்பட முடியும் என்றும் புதிய வரைவு கூறுகின்றது.
ஜனாதிபதி வசமிருந்த பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அந்த அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களிடம் கைமாற்றவும் ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், தொடர்ந்தும் நாட்டின் நிறைவேற்றுத் தலைவராக ஜனாதிபதியே இருப்பார் என்றும் அவரே அரசாங்கத்துக்கும் தலைவர் என்றும் புதிய வரைவு கூறுகின்றது.
ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், அந்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்வதாக அரசியல் அவதானிகள் விமர்சித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு சொல்லுகின்ற அமைச்சரவை ஆட்சிமுறையை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்த மைத்திரிபால சிறிசேன, வெற்றிபெற்ற பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டதாக மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் பி.பி.ஸிக்கு கூறினார்.
பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கமுடியாது என்று பிரசாரம் செய்துவந்த சுதந்திரக் கட்சியின் தலைவராக மாறியிருப்பதே அவரது தயக்கங்களுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlrzG.html
இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 01:51.17 AM GMT ]
இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை.
எனினும் குறித்த நாடுகளில், துறைமுக அபிவிருத்தி, எண்ணெய், எரிவாயு குழாய் கட்டுமானம், நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட வர்த்தக உட்கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் உள்ளன.
தேசிய பாதுகாப்பு கரிசனைகள், மற்றும் வர்த்தக நலன்கள் தொடர்பான எல்லா முன்னேற்றங்கள் குறித்தும், இந்திய அரசாங்கம் நிரந்தமான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
தற்போதுள்ள பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கேற்ப, இவற்றைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் விவகாரங்களில் முன்னேற்றம்: அமெரிக்கா
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 03:17.57 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச மதசுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைக்குழு இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது.
குறித்த குழுவினர் தங்களது மூன்று நாள் பயணத்தின்போது வெளிவிவாகர அமைச்சர் உட்பட பலரை சந்தித்து உரையாடினர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நம்பிக்கையளிப்பவையாக காணப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அனைத்து மதத்தினர் மற்றும் இனத்தினர் மத்தியிலும் நல்லிணக்கம் அவசியம் என தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
பேரழிவை ஏற்படுத்திய யுத்தத்திற்கு பின்னர் கடந்த சில வருடங்களில் சிறுபான்மை மதத்தவர்கள் தாக்கப்படுகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
புதிய அரசாங்கம் மதச் சிறுபான்மையினருடன் பேச்சுக்களை மேற்கொள்வது தேசிய ஐக்கியத்தை நோக்கிய சிறந்த விடயம் என அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர் எரிக் ஸ்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு காரணமாணவர்களை நீதியின் முன்நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். பொறுப்புக்கூறல் என்பது பாதுகாப்பையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல நம்பிக்கையும் அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr0E.html
நல்லாட்சியிலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 04:27.15 AM GMT ]
மஹிந்தரின் ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கில் இராணுவ அதிகாரிகள் பல பதவிகளில் இருந்து வந்தார்கள். வடகிழக்கு ஆளுனர்கள் உட்பட திருகோணமலை அரசாங்க அதிபராக இராணுவ அதிகாரி ஒருவர் 8 வருடங்களாக கடமையாற்றி வந்தார்.
இந்த இராணுவ அதிகாரிகள் தற்போது நீக்கப்பட்டு சிவில் அதிகாரிகள் கடமையில் அமர்த்தப்பட்பட்டுள்ளார்கள். ஆனால் மழைவிட்டும் தூவாணம் விட்டபாடில்லை என்பது போல்தான் உள்ளது.
காரணம் பதவிக்குத் தகுதியே இல்லாத பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் கிழக்கு மாகாண சபையில் மூன்று பதவிகள் வகித்து வருகின்றார்.
முதலாம் வகுப்பு தரம் கொண்ட இந்த பெரும்பான்மை இனத்தவர் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு, ஆளுனரின் பதில் செயலாளராகவும், கல்வி அமைச்சின் பதில் செயலாளராகவும் மூன்று பதவிகளில் கடமையாற்றி வருகின்றார்.
இந்தப் பதவிகளில் விசேட தரம் கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மற்றும் ஸ்தானக்கோவை மற்றும் வர்த்தமானிச் சட்டமும் உள்ள போதிலும் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு முதலமைச்சரும் இணைந்து இந்தப் பதவிகளைச் செய்துள்ளதாக அறியப்படுகின்றது.
இந்த மூன்று பதவிகளில் ஒரு பதவி கூட இந்த சிங்கள அதிகாரி வகிக்க முடியாது என்ற சட்டம் உள்ள நிலையில், தகுதியே இல்லாது மூன்று பதவிகளில் இருப்பது என்ன சட்டம்.
தேவைப்படும் தகுதி கொண்ட தமிழ் அதிகாரிகள் உள்ள நிலையில் தகுதியே இல்லாத சிங்கள அதிகாரி ஒருவர் மூன்று பதவிகளில் வகிப்பது என்பது நல்லாட்சியில் அநீதி இல்லையா? அல்லது தமிழ் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்களா?
இந்த ஈனச் செயல்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் உடந்தையாக உள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய அதிகாரி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பின்பு அந்தச் செயலாளர் பதவி வெற்றிடமானது.
ஆனால் விசேட தரம் கொண்ட தமிழ் அதிகாரியான திருமதி முரளிதரன் மாகாண பிரதம பிரதிச் செயலாளர் பிரத்தியேகப் பயிற்சி என்னும் உப்புச் சப்பு இல்லாத பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த நேர்மையான அதிகாரியை கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடகிழக்கு சமாதான நீதவான்கள் மற்றும் மனித உரிமை அமைப்பின் பொதுச் செயளாளர் எம்.எம்.நிலாம்டீன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அணியின் மாகாண சபை உறுப்பினர்களோ இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் அநீதி.
தமிழ் முதலமைச்சர், தமிழ் கல்வி அமைச்சர் ஆகியோர்கள் பதவியில் இருந்தும் கல்வி அமைச்சின் செயலாளராக ஒரு தமிழ் அதிகாரி நியமிக்கப்படவில்லையென்றால் இனிமேல் எப்போது கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பு.
இந்த விடயம் தமிழ், முஸ்லிம் மாகாண சபை ஆட்சியாளர்களின் கடமை இல்லையா. அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்ட வேண்டாமா? அதிலும் விசேடமாக ஒரு சிறிய அநீதிக்கும் குரல் கொடுக்கும் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் இந்த விடயத்தில் வாயடைத்துப் போய்விட்டார்கள் என்பதுதான் வேடிக்கை.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr0I.html
Geen opmerkingen:
Een reactie posten