தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 maart 2015

கோட்டபாயவை கைதுசெய்யவேண்டாம் என்றார் ரணில்: போட்டு உடைத்த சிங்கள !

யுத்தம் முடிந்தாலும் செல்துண்டுகள் இன்னும் உயிரை எடுக்கின்றன !

[ Mar 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 10630 ]
முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் காயமடைந்த கிளிநொச்சியை சேர்ந்தவரும் தற்போது வவுனியா கற்பகபுரத்தில் வசித்து வந்தவருமான முன்னாள் போராளி மகோகரன் ஜெயக்குமார் கடந்த 6ம் திகதி காலமாகியுள்ளார். 2009ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தின்போது காயத்திற்கு உள்ளான ஜெயக்குமாரின் உடலில் செல்துண்டுகள் இருந்துள்ளதுடன் அதனால் அவரது முள்ளந்தண்டும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
தந்தை பிரிந்து வாழும் நிலையில் தனது தாயராரையும் மூன்று சகோதரர்களையும் ஜெயக்குமாரே பராமரித்து வந்தார்.இதேவேளை முள்ளந்தண்டு பாதிப்புக்க உள்ளான நிலையிலும் தர்சினி என்ற பெண் குடும்ப எதிர்ப்பையும் மிறி ஜெயக்குமாரை திருமணம் செய்தார். இதேவேளை தற்போது மூன்று மாத குழந்தை ஒன்றுடன் தர்சினி விதவை ஆகியுள்ளார். யுத்தம் முடிந்தபோதும் யுத்தம் விட்டுச் சென்ற எச்சங்கள் இவ்வாறு தொடர்ந்து பலி எடுப்பதும் இளம் விதவைகளை உருவாக்குவதாயுமுள்ளது.
ஜெயக்குமார் உயிர் விடும் தருணத்தில் தனது தாயாரை நோக்கி "அம்மா எனது மனைவியையும் குழந்தையையும் இறுதிவரை கைவிடாதீர்கள்" என கூறியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜெயக்கும்மாரின் வீட்டிற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளதுடன் நல்லுள்ளம் படைத்தவர்கள் முனனாள் போராளி ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2526.html

கோட்டபாயவை கைதுசெய்யவேண்டாம் என்றார் ரணில்: போட்டு உடைத்த சிங்கள !

[ Mar 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 22075 ]
ரணில் மற்றும் ராஜபக்ஷர்களுக்கு இடையே ஒரு ரகசிய டீல் உள்ளது என்ற விடையத்தை அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டு இருந்தது. இது தற்போது முற்று முழுதாக உண்மை என்ற விடையம் வெளியாகியுள்ளது. கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்வது குறித்து ,சட்ட மா அதிபர் திணைக்களம் பிரதமர் ரணில் ஆலோசனையை பெறமுற்ப்பட்டுள்ளார்கள். கைதுசெய்து விசாரிப்பதை தவிர்த்துவிட்டு , வேறு வழியில் விசாரணைகளை நடத்துமாறு ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்பு விடுத்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்பட்டால் அது தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடுமென பிரதமர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆயுதங்களை எடுத்து , தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்துள்ளார் கோட்டபாய. இது ஒரு பாரிய குற்றமாகும். அது குறித்து விசாரிக்க பொலிசாரால் முடியவில்லை. அது இது என்று சாக்குப்போக்கைச் சொல்லி ராஜபக்ஷர்களது கைதை ரணில் தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க, ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எகொடாவல மற்றும் அவன்ட் க்ரேட் கடற்பாதுகாப்பு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்சுள யாபா ஆகியோரின் கடவுச் சீட்டுக்களை தற்காலிக அடிப்படையில் முடக்கவும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் நேற்று(09) உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பதவி வகித்து வந்த தமயந்தி ஜயரட்ன நியூசிலாந்துக்கு சென்றுள்ளார். தமயந்தியின் கடவுச்சீட்டை முடக்குவதற்கு காவல்துறையினர் முயற்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரையும் ரணிலே தப்பவிட்டார் என்று கூறப்படுகிறது. 
http://www.athirvu.com/newsdetail/2523.html

Geen opmerkingen:

Een reactie posten