தமிழர்களுக்கு நீதி வேண்டும் , சர்வதேச விசாரணை உடனடியாக நடைபெறவேண்டும் என்று லண்டனில் உள்ள தமிழர்கள் திங்கட்கிழமை ஆர்பாட்டத்தை நடத்தி ஒரு நாள் கூட ஆகவில்லை. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) பின் கதவால் சென்று மைத்திரியை பார்த்து கை குலுக்குவிட்டு வந்துவிட்டார்கள் சிலர் ஈழத் தமிழர்கள். இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால் , யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் என்று சொல்லி சும்மார் 18 பேர் மைத்திரியைச் சந்தித்துள்ளார்கள். இது எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
இதுபோக லண்டனில் மைத்திரிக்கு அலுவலகம் திறந்துகொடுத்த , மருத்துவர் புவி போன்ற நபர்களும் நேற்றைய தினம் மாலை மைத்திரியை சந்தித்துள்ளார்கள். அமைச்சர் சுவாமி நாதன் , வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் இச்சந்திப்பின்போது உடன் இருந்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இது இவ்வாறு இருக்க உலக நாடுகளில் உள்ள சுமார் 17 ஈழத் தமிழ் அமைப்புகளை , மகிந்த அரசாங்கம் தடை செய்தது. மேலும் 425 பேரது பெயர்களையும் அது தடைப்பட்டியலில் இணைத்தது. அதனை விலக்கிக்கொள்ளுமாறு , கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது குறித்து தற்போதைய அரசாங்கம் வாய் திறக்கவே இல்லை. மேலும் லண்டனில் தங்கியுள்ள மைத்திரியை சந்திக்க சில தமிழ் அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் அந்த தடைப் பட்டியலில் இருந்து தமது அமைப்புகளின் பெயர்களை விலக்கி கொள்ளவே என்றும் கூறப்படுகிறது.
லண்டனில் மைத்திரியை சந்தித்தவர்கள்:
நந்தா
பி.விவேகானந்தா
கே.சிவாஜி
பி.பிரேம்குமார்
கெளரி
சன்முகலிங்கம்
தனிப்பட்ட சந்திப்பில்
கெளரி(லேபர் கட்சி ஆதரவாளர்) சுகந்த குமார் , மருத்துவர் புவி .
Geen opmerkingen:
Een reactie posten