தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

விக்னேஸ்வரன், ஹக்கீம் ஆகியோரின் இனவாதம் ஒருவருக்கும் தென்படுவதில்லை! பொதுபல சேனா தேரர்

ஜேர்மன் குழு இலங்கைக்கு 4 நாள் விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 11:33.23 AM GMT ]
ஜேர்மன் வெளிவிவகார ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குனர் பீட்டர் புறுகேல் இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குனருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழு எதிர்வரும் 13ம் திகததி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கட்சி பிரதிநிதிகள், அரச தரப்பினர், எதிர்கட்சியினர், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இக்குழுவினர் வட, கிழக்கிற்கும் விஜயம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையால் பின்வாங்கக் கூடாது: ஹரி சங்கரி
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 11:58.34 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளித்தாலும், அதனை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக அவர் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் தாங்கள் பின்னுக்குப் போய் அதன்பிறகே முன்னுக்கு வந்துள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் வரப்போகும் கூட்டத் தொடரில் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. இந்த ஏமாற்றத்தை வைத்துக் கொண்டு. நாம் பின்வாங்கக் கூடாது.
ஒவ்வொருமுறையும் ஐ.நாவில் இலங்கை தொடர்பில் ஒப்பந்தம்கொண்டு வரும்போது சில தமிழ் அமைப்புகள் மற்றும் சில தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தான் ஆறு மாதம் அறிக்கை பிற்போடப்பட்டமை பெரிய தோல்வி என்று இப்போது கூறுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 12:46.20 PM GMT ]
கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற 3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளும் அபிவிருத்தியை 100 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பணிப்புரை வழங்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo6A.html

விக்னேஸ்வரன், ஹக்கீம் ஆகியோரின் இனவாதம் ஒருவருக்கும் தென்படுவதில்லை! பொதுபல சேனா தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 01:41.47 PM GMT ]
சிங்கள இனவாதம் என்று எல்லா அரசியல் வாதிகளும் கத்துகின்றனர். விக்னேஸ்வரனின் இனவாதம் ஒருவருக்கும் தென்படுவதில்லை. ஹக்கீமின் இனவாதம் ஒருவருக்கும் காண்பதில்லை என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
கண்டி சிங்கள உடன்படிக்கை குறித்து நன்கு கற்குமாறு இந்த நாட்டின் பிரதமரையும் நல்லாட்சி அரசியல் வாதிகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்
அரசியல் செய்ய முன்னர், நாட்டை வழிநடாத்த முன்னர் வெறும் வெற்றுப் பேச்சுக்களை விடுத்து இந்த நாட்டின் சுற்றுச் சூழல் குறித்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கும் நாம் சொல்கின்றோம். நீங்கள் சோஷலிச சமூகத்தை உருவாக்கு முன்னர், கண்டி சிங்கள உடன்படிக்கையை படிக்குமாறு.
சிங்கள இனவாதம் என்று எல்லா அரசியல் வாதிகளும் கத்துகின்றனர். விக்னேஸ்வரனின் இனவாதம் ஒருவருக்கும் தென்படுவதில்லை. ஹக்கீமின் இனவாதம் ஒருவருக்கும் காண்பதில்லை.
இது லொறியின் முன்னால் புது சரணய் என்று போட்டுக்கொண்டு, உள்ளே கள்ள மாடுகளை எடுத்துச் செல்வதைப் போன்றது. முன்னால் புது சரணய் என்று அடிக்கப்பட்ருந்தால் உள்ளே மாடு இல்லை என்று நினைப்பார்கள் தானே எனவும் தேரர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo6E.html


Geen opmerkingen:

Een reactie posten