[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 02:56.19 PM GMT ]
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை வருத்தமளிப்பதாக ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ள மக்களை அணி திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய அரசாங்கமொன்றை அமைத்து அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதனைத் தவிர, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதாக இணங்கப்படவில்லை.
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பிரதமர் எதிர்ப்பை வெளியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டு. மற்றும் அம்பாறையை சேர்ந்த இருவர் மரணம்!
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 04:07.18 PM GMT ]
மட்டக்களப்பு, கோவில்போரதீவைச சேர்ந்த ச.துவாரகன், அம்பாறை, பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த காரும் லொறி ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஜெப்ரி பெல்ட்மன்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 04:10.07 PM GMT ]
கொழும்பில், இன்று பிற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதனிடையே, நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த அவர், இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு தரப்பினருக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெப்ரி பெல்ட்மன் முன்னதாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்தார். அத்துடன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo6I.html
Geen opmerkingen:
Een reactie posten