தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 maart 2015

சம்பந்தனின் உருவப்பொம்மை எரிப்பு - மாவை எம்.பி கடும் கண்டனம்



ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2015, 01:37.56 AM GMT ]
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள 6 மாத காலப்பகுதி அவகாசத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான தேவையுள்ளமையை தாம் வலியுறுத்தியதாக கமரூன் தெரிவித்துள்ளார்.
தமிழ் காடியனுக்கு அனுப்பியுள்ள எழுத்துமூல அறிக்கை ஒன்றில் கெமரோன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை 6 மாதங்களுக்கு பிற்போட்டமையை இலங்கையின் எதிர்காலம் கருதிய ஒவ்வொருவரும் வரவேற்கவில்லை.
குறிப்பாக தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறும் வடக்கு கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் குறித்த மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளது
எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக கமரூன் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசாங்கம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இராணுவ சூன்ய நிலை ஏற்படுத்தப்படவேண்டும். இராணுவம் பிடித்து வைத்திருக்கும் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவேண்டும்
இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை தாம் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சந்தித்த முகங்களை தம்மால் மறக்க முடியாது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்
எனவே எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிடவுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்கள் அடங்கியிருக்கும் என்று கமரூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதன்போது இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவும் விருத்தியடையும் என்று கமரூன் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyDSUSUmt3A.html


சம்பந்தனின் தலைமையை மக்கள் ஏற்றுள்ளார்கள்! சுமந்திரன் யாழில் போட்டி
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2015, 02:10.37 AM GMT ]
ஈழத்தில் ஜனநாயகம் தளைத்தோங்குகிறது என்பதைக் காட்டுவதாகவே அங்கு இடம்பெறும் உருவப் பொம்மைகள் எரிப்புப் போராட்டங்கள் காட்டி நிற்கின்றன. ஆனால் தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரிக்கும் செயல்கள் மக்களின் எழுச்சியால் இடம்பெறவில்லை.
என லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
யாழ் தேர்தல் மாவட்டப் பிரதிநிதித்துவம் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதில் இருந்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களாகக் குறைகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யார் போட்டியிடுவது என்ற குழப்பங்களை போட்டியிட விருப்புக் கொண்டோர் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2010ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 6 ஆயிரம் வாக்குகளை மாத்திரம் பெற்றது. இந்த வாக்குகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்ததால். இதனால் ஈ.பி.டி.பி இன்னொரு ஆசனத்தை கைப்பற்றியது.
அதுபோலவே இந்த முறையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகிறது. ஈ.பி.டி.பி அல்லது ஐ.தே.கவிற்கு இது மிகவும் சாதகமாக அமைந்து அவர்களிற்கு மேலதிக ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொடுக்கும் என்பது உள்ளிட்ட பல மிகமுக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSUSUmt3C.html

சம்பந்தனின் உருவப்பொம்மை எரிப்பு - மாவை எம்.பி கடும் கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2015, 02:04.46 AM GMT ]
யாழ்ப்பாணத்திலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமையை தமிழரசுக்கட்சி கண்டித்துள்ளது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த சம்பவங்களை கண்டித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானங்களை புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
எனினும் சிலரே தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்கள் தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரிக்கிறது.
இந்தநிலையில் அந்தக்கூட்டமைப்பின் பெயரை களங்கப்படுத்த சிலர் முனைவதாகவும் சேனாதிராஜா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பந்தன், சுமந்திர8ன் உருவப்பொம்மைகளை எரிப்போர் ஏன் போர்க்குற்றங்களை புரிந்த மஹிந்த ராஜபக்சவினமும், கோத்தபாய ராஜபக்சவினதும் உருவப்பொம்மைகளை எரிக்கவில்லை என்று சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSUSUmt3B.html

Geen opmerkingen:

Een reactie posten