மருத்துவர் புவி, விமலதாசன் , ஆகிய இருவருமே இதற்கு முழு மூச்சாக நின்று உதவியுள்ளார்கள். இந்த மருத்துவர் புவி , விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் வன்னிசென்று அவர்களோடு ஒட்டிக்கொண்டார். பின்னர் 2009ம் ஆண்டு புலிகள் பின்னடைவைச் சந்தித்தவேளை, இவர்கள் இப்படிதான் தோற்றுப்போவார்கள் என்று எனக்கு முன்னரே தெரியும் என்று போராட்டத்தையும் போராளிகளையும், கேலி செய்தார். பின்னர் ஓடிப்போய் KP யோடு இணைந்துகொண்டார். அவரும் வேலைக்கு ஆகாது என்று தெரிந்த பின்னர் இவர்கள் இருவரும் (புவி+விமலதாசன்) மகிந்தர் பக்கம் சாய்ந்தார்கள். அப்போது பிரித்தானிய தூதுவராக இருந்த ஹம்சாவுடன் ஒட்டினார்கள்.
தற்போது ஆட்சியில் இருப்பது மைத்திரி. அவரோடு ஒட்டிக்கொள்ள முயற்சியை மேற்கொண்டுதான் , லண்டனில் அவருக்கு ஒரு அலுவலகத்தை திறக்க உதவுகிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் லண்டன் கிளை என்று ஒரு அமைப்பை திறந்து அதன் உப தலைவர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார் விமலதாசன். இதற்கு பின்னணியில் உண்டுகொடுப்பது புவி. இவர்களைப் போன்ற நவீன காக்கை வன்னியன்கள் எமது சமூதாயத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். பஞ்சோந்தியை விட மிகவும் வேகமாக கலர் மாறும் தன்மை கொண்டவர்கள் இவர்கள். இவர்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது. பெயரும் -புகழும் வரவேண்டும் என்று , அலைந்து திரிகிறார்கள். குழந்தைகளையும் , கர்பிணிகளையும் கொன்ற ராஜபக்ஷவின் கட்சிக்கு குடை பிடிக்க இவர்கள் சென்றது , எவ்வளவு கேவலமான விடையம் என்பதனை இவர்கள் ஒரு நாள் புரிந்துகொள்வார்கள். இல்லையென்றாலும் புலம் பெயர் மக்கள் புரியவைப்பார்கள்.
இந்த மருத்துவர் புவி தற்போது லண்டனில் உள்ள , இளையோர்களையும் குறிவைத்து வேலைசெய்து வருகிறார். மேலும் சில தமிழ் மருத்துவர்களை தம்மோடு இணைந்து ஹரோவில் உள்ள உணவு விடுதியில் கூட்டங்களை நடத்தி கும்மாளம் போடுகிறார். வன்னியில் உள்ள KP யோடு நெருங்கிய உறவில் இருக்கும் லண்டன் மெளலியின் மனைவியும் புவியோடுதான் அலைந்து திரிகிறார். சமீபத்தில் இவர்கள் கூடி கும்மாளம் அடித்த செய்தியை கூட நாம் வெளியிட்டு இருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2471.html
Geen opmerkingen:
Een reactie posten