தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

பிரபாகரனின் ரகசிய கட்டங்களை கட்டிய நபர் இறுதியாக விடுதலையானார் !

பணக்கார குடும்பத்து பிள்ளைகளை கடத்தி கப்பம் பெற்றது கடற்படை: அதிர்ச்சி தகவல் அம்பலம் !

[ Mar 06, 2015 06:34:26 AM | வாசித்தோர் : 13685 ]
கடற்படை முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க தலைமையிலான குழு விசேட கடற்படைப் பிரிவு போன்று இயங்கி 10 மாணவிகளை கடத்தி அவர்களின் பெற்றோர்களிடம் கப்பம் பெற்றுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த குழுவிடம் இருந்து காணாமல் போன 5 மாணவர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு கடந்தப்பட்ட மாணவர்கள் உயிருடன் உள்ளனரா கொல்லப்பட்டுள்ளனரா என தகவல் தெரியாதிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி தெரிவித்தார். மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பல தகவல்கள் அம்பலமா கியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இது குறித்து மேலும் கூறியதாவது,
2008/09 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போனது குறித்த தகவல் பொலிஸூக்கு கிடைத்தது. முன்னர் கடற்படை தளபதியாக இருந்த கரந்தெனியவினால் பொலிஸ் மா அதிபருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. திருகோணமலையிலும் கொழும்பிலும் கடற்படை விசேட பிரிவு இயங்கி வந்துள்ளது. இதனடிப்படையிலே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் உட்பட 7 கடற்படை சிப்பாய்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. வேன் மற்றும் வாகனங்களிலே இம்மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அநேகர் பணக்கார வீட்டு பிள்ளைகளாவர்.
இவர்கள் தமது பெற்றோருடன் தொலைபேசியில் பேச வைக்கப்பட்டுள்ளதோடு பின்னர் பல இலட்சம் ரூபா கப்பமாக பெறப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாணவரும் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனவர்களில் கூடுதலானவர்கள் கொழும்பு பிரதேச மாணவர்களாகும். இதேவேளை, இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பிலான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரகசிய தடுப்பு முகாம்கள் காணப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறான எந்தவிதமான தடுப்பு முகாம்கள் இயங்கவில்லை என பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே மகிந்தரை தொடர்ந்தும் காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2486.html

பிரபாகரனின் ரகசிய கட்டங்களை கட்டிய நபர் இறுதியாக விடுதலையானார் !

[ Mar 06, 2015 06:58:43 AM | வாசித்தோர் : 34050 ]
விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் , மேலும் புலிகளுக்காக பல ரகசிய கட்டங்களை அமைத்துக்கொடுக்க உதவியவருமான திவாகரனை(47) இலங்கை அரசு தற்போது விடுதலை செய்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. புலிகளின் தலைவர் ரகசிய கூட்டங்களை நடத்த ஏதுவான பல கட்டங்களை திவாகரன் வடிவமைத்து நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். விமானக் குண்டுகள் துளைக்காத கட்டிடங்களை நிர்மாணிப்பதில் இவர் வல்லவர். தனது எஞ்சினியர் படிப்பை இவர் பெரதேனியா பல்கலைக் கழகத்தில் முடித்தவர்.
இவரை 28 ஜூலை 2013ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கோட்டபாயவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். மேலும் இவர் மீது வேண்டும் என்றே வழக்குப் பதிவுசெய்யாமல் தொடர்ந்தும் மறியலில் வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் மாறியுள்ள நிலையில், மகசீன் சிறையில் இருந்த திவாகரனை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/2487.html

Geen opmerkingen:

Een reactie posten