தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

மீண்டும் ஒரு பேரிடருக்கான அடித்தளமாக அமைகின்றது உமாஓயாத் திட்டம்

ஏப்ரல் 23ம் திகதியின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 02:26.25 PM GMT ]
எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதியின் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வது அவசியம் என்று ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கோருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை ஜே.வி.பியும் ஏப்ரல் 23ம் திகதியின் பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu6J.html

பொலனறுவையில் சிறிய அளவிலான நில நடுக்கம்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 03:56.12 PM GMT ]
பொலனறுவையில் சிறிய அளவிலான நில நடுக்கமொன்று இன்று பதிவாகியுள்ளது.
இன்றிரவு 8.20 அளவில் சிறியளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலனறுவை, கிரிதலே, பக்கமுன, கதுருவெல, தியபெதும ஆகிய இடங்களில் நில நடுக்கத்தை உணர முடிந்துள்ளது.
இந்த நில நடுக்கம் சுமார் சில விநாடிகள் நீடித்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு பேரிடருக்கான அடித்தளமாக அமைகின்றது உமாஓயாத் திட்டம்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 04:34.54 PM GMT ]
இலங்கை திருநாடு இயற்கை வளங்கள் கனிமங்களை கொண்ட நாடு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனலாம். இதன்படி இத்தகைய இயற்கை சூழலளானது உயிரினங்களின் நிலை பேற்றிக்கு உன்னதாமான பங்களிப்பினை ஈற்றி வருகின்றது.
இத்தகைய இயற்கை வளம் இன்று மனிதனின் செயற்பாட்டால் அவற்றின் தரம் என்பது பேணமுடியாமல் போய்க் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சூழலின் தரம் தொடர்ச்சியாக பேணப்பட்டால்தான் உயிரினங்களின் தொடர்ச்சியான வாழ்க்கை நிலைபேற்றிக்கு சாதகமான தன்மை காணப்படும்.
இதன்படி இலங்கையில் மத்திய மலைநாடு என்பது மலைத்தொடர்களாலும் கற்பாறைகளாலும் இயற்கை நீர் அருவிகளாலும் காடுகளாலும் சூழப்பட்டிருக்கின்றது. இங்குதான் அதிகளவான கனிமங்கள், விலை மதிப்பில்லாத மூலிகைகள், இரத்தினக்கற்கள், போன்ற இன்னோரன்ன இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.
இத்தகைய இயற்கை வளம் நிரம்பிய மத்திய மலைநாடு இலங்கையின் இரண்டாவது இயற்கை பேரழிவை ஏற்படுத்திய மீரியபெத்த நிலச்சரிவின் ஊடாக அனைவரினதும் பார்வையை மலையகத்தின் பக்கம் திருப்பியிருந்தது.
இந்த நிலச்சரிவுக்கு காரணம் இயற்கையின் சீற்றம் என்றாலும் அதில் பல அக- புறக் காரணிகள் இருப்பதாக சூழலியலாளர்கள் சுட்டி காட்டினர்.
குறிப்பாக கற்பாறைகள் உடைக்கப்படல் (வெடி வைத்து தகர்த்தப்படல்), அணைகட்டுகளின் நீர் கசிவு, மரங்கள் வெட்டப்படல், இரத்தினக்கல் அகழ்வு போன்ற இன்னும் பல விடயங்கள் செல்வாக்கு செழுத்துவாதாக கூறப்படுகின்றது.
இந்த பேரழிவை தொடர்ந்து தற்போது மற்றுமொரு பேரிடருக்கான அடிதளம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுதான் பண்டாரவளை பிரதேசத்தில் அமைக்கப்படும் உமா ஓயா திட்டம். இத்திட்டத்ததால் இன்று பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
எதிர்காலத்தில் மாபெரும் பேரழிவனை ஏற்படுத்தும் சம்பவம் இடம்பெறுவதற்கான திட்டமாக உமா ஓயாதிட்டம் காணாப்படுகின்றது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதனை அடுத்து அப்பிரதேச மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணறுகளில் நீர் வற்றி போய்யுள்ளது. அத்தோடு அப்பிரதேச குடியிருப்புகளின் சுவர்கள் வெடிப்புகளுக்குள்ளாகியுள்ளன. அப்படியாயின் அத்திட்டத்ததை பற்றி முடுதலில் அறிவது அவசியமாகின்றது.
அதன் கருத்திட்டங்களும் நிகழ்ச்சித்திட்டங்களும்
உமாஒய பல்தொழில் அபிவிருத்தி கருத்திட்டம்
உமாஒயவின் பிரதான கிளை நதிகளுக்கு குறுக்கே வெலிமடையிலும் தியராபவிலும் இரண்டு அணைகளை அமைப்பதும் ரந்தெனியில் நிலக் கீழ் மின்சார நிலையத்துடன் 23 கி.மீ.நீளமான உள்முக ஆற்றுப்பள்ளத்தாக்கு திசை திருப்பும் சுரங்கமொன்றை அமைப்பதும் உமாஒய பல்தொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தில் உள்ளடங்குகிறது.
இத்திட்டத்தின் மூலம் MCM 145 நீர் கொள்ளளவை கிரிந்திஒய பள்ளத்தாக்கிற்கு திருப்பி 120 மெ.தொ.கொள்ளளவைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மின்சார நிலையத்தின் ஊடாக 231 இலத்திரன் சக்தி உற்பத்தி செய்யப்படும்.
கிரிந்தி ஒய பள்ளத்தாக்கிற்கு நீரை திருப்பியதன் காரணமாக தற்பொழுது பயிர்ச் செய்யக்கூடியதாக இருக்கின்ற 1500 ஹெக்டயர் பயிர்ச் செய்கை நிலம் 4500 ஹெக்டயர் நிலமாக விரிவடையும்.
கருத்திட்டத்தின் பிரதான அம்சங்கள்:
• புஹுல்பொல, தல்கொல்ல ஒயவின் குறுக்காக 45 மீற்றர் உயரமுள்ள அணை.
• தியராப, மதட்டில்ல ஒயாவின் குறுக்காக 30 மீற்றர் உயரமுள்ள அணை
• புஹுல்பொல, தியராப நீர்த்தேக்கத்திற்கு இடையில் 3975 மீற்றர் நீளமுள்ள தொடர்பு சுரங்கம்.
• தியராப நீர்த்தேக்கத்திலிருந்து அழுத்த கட்டுப்பாட்டு வாவி வரையிலான பேராறு சுரங்கம் 15,150 மீற்றர் நீளமானது.
• 100 மீற்றர் உயரமுள்ள அழுத்த கட்டுப்பாட்டு கம்பம்.
• 700 மீற்றர் உயரமுள்ள கிடைநிலை அழுத்த கட்டுப்பாட்டு கம்பம்.
• 60 மெ.தொ. கொள்ளளவுடன் அமைக்கப்பட்ட இரண்டு பெல்டன் டெர்பையினுடனான நிலக் கீழ் மின்சார நிலையம்.
• 3335 மீற்றர் நீலமுள்ள ஆலை அடிக்கால்வாய் வடி தேக்க சுரங்கம்.
ஆலை அடிக்கால்வாய் பெருக்கு கிரிந்தி ஒய கிளை நதியான அல்லிக் கோட்டை ஆற்றுக்கு நீர் விடுவிக்கப்படும்.
அல்லிக் கோட்டை ஆற்றுக்கு குறுக்கே ஒழுங்கு முறைப்படுத்தல் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து கிரிந்தி ஓயாவின் தென் கரையில் நீர்ப்பாசன பணிகளுக்காக நீரை ஒழுங்குமுறைப்படுத்தி விநியோகிக்கின்ற குடா ஓயாவில் அமைந்துள்ள புதிய நீர்த் தேக்கத்திற்கு நீர் மாற்றப்படும்.
அந்நீரின் ஒரு பகுதி கிரிந்தி ஓயாவுக்கு விடுவிக்கப்படுகின்ற அதே நேரத்தில் அந்நீர் கிரிந்தி ஓயாவின் இடது கரையில் தற்பொழுது இருக்கின்ற ஹந்தபானகல வாவிக்குத் திருப்பப்படும். நீரைத் திருப்புவதற்காக ஹந்தபானகல வாவியின் அணை 8 மீற்றரால் உயர்த்தப்படும்.
உமா ஓயாவிலிருந்து திருப்பப்பட்ட நீரினால் சுமார் 14 சிறிய குளங்களுக்கு நீர் விநியோகிக்கப்படும்.
ஈரான் இஸ்லாமிய குடியரசிடமிருந்து 450 மில்லியன் அ.டொ. நிதி வழங்கப்படவுள்ள அதே நேரத்தில் மிகுதிப் பணம் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும்.
இத்தகைய திட்டங்களுடன் முன்னெடுக்கும் உமாஓயா திட்டமானது 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் பிரேரிக்கப்பட்ட போது அத்திட்டத்தின் ஊடாக மக்கள் சுதந்திரமாக நீரை பெற்றுகொள்ள முடியாது போகும் என்ற காரணத்தினாலும், தொழினுட்ப குறைபாடு காரணமாகவும் இத்திட்டம் அப்போது கைவிடப்பட்டிருந்தது.
ஆனால் மீண்டும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி ஈரான் அரசாங்கத்ததால் வெல்லவாய பகுதியில் மீண்டும் அடிகல் நாட்டப்பட்து 85வீத நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் 40வீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது இத்’திட்டத்தின் ஊடாக எழுந்துள்ள பிரச்சினை அப்பரதேசத்தில் குடிநீர் வற்றிப்போயுள்ளமையும் அப்பிரதேச குடியிருப்புகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமையும் ஆகும்.
இத்திட்டமானது உரிய முறையில் மேற் கொள்ளப்படவில்லை தொழிநுட்ப குறைபாடுகள் காணப்படுகின்றமை என்பவற்றினால் எதிர்காலத்தில் இப்பிரதேசம் முழுமையாக அழிந்து போய்விடுவதற்கான சாத்தியகூறுகளே காணப்படுகின்றன.
தற்போது இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு உமா ஓயா திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை சுற்றாடல் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இறுதி அறிக்கை கிடைக்கும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, உமா ஓயா திட்டம் குறித்து சுற்றாடல் மற்றும் நிலத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான பத்து பேர் கொண்ட குழுவின் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைகழகத்தின் புவிசரிதவியல் ஆய்வாளர்கள், புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள், தேசிய கட்டட ஆய்வு நிலைய உத்தியோகஸ்தர்களும் இந்த குழுவில் அடங்குவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளை பிரதேசத்தில் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட முடியும்.
இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சுரற்க அகழ்வின் காரணமாக எதிர்காலத்தில் இப்பரதேசம் சரிவுகளுக்குட்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
இத்திட்டம் அபிவிருத்தக்காக பயன்படுத்தப்டுவதாக கூறினாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது அதிகமாகவே காணப்படும். தற்போது சுற்றாடல் துறை அமைச்சராக அதிமேதகு ஜனாதிபதியே காணப்படுவதன் காரணமாக சுற்றாடலுக்கும், மக்களுக்கும் எத்தகைய் பாதிப்புகளும் இல்லாது உரிய நடவடிக்கை எடுக்க முன்வருதல் வேண்டும்.
இல்லாவிடின் இன்னுமொரு மீரியபெத்த நிகழ்வுகளை மக்கள் சந்திக்க நேரிடலாம்.இவை மட்டுமல்லாது, இன்னும் பல ஆது போன்ற திட்டங்களுக்கு முன்னைய அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது.
2.14 மொறகஹகந்தை, உமா ஓயா, தெதுறு ஓயா மற்றும் யான் ஓயா திசை திருப்பல் திட்டங்கள் வடக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலுள்ள வரண்ட வலயங்களுக்கு 2016ஆம் ஆண்டளவில் நீர்ப்பாசனம் செய்வதற்கான திட்டம் வெஹெரகல, றம்புக்கன் ஓயா நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உமா ஓயா திட்டத்தின் மூலம் தற்போத இனங்காணப்பட்ட பிரச்சினைகளின் சாரம்சமாக இந்த பகுதியிலுள்ள பிரதான கிணறுகளில் நீர் வற்றிபோய்யுள்ளமை, சில கிணறுகளில் நீர் முழுமையாக வற்றியுள்ளதுடன், சில கிணறுகளிலுள்ள நீரை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
பொரலந்த – வேரகம – மக்குல்எல்ல – ஏகொடகம – திக்அராவ ஆகிய பகுதிகளில் கிணறுகளில் நீரை பெற்றுக்கொண்ட மக்கள் இன்று பௌசர்களின் மூலம் நீரை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாய நடவடிக்கைகளைக் கூட முன்னெடுக்க முடியாத நிலைமை அப்பகுதியில் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற பகுதியிலுள்ள கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளமையையும் சுட்டி காட்ட முடியும்.
இவ்வாறான பிரச்சினைகளுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவது குறித்து சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களே, இதற்கான தீர்வு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அதுவும் இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தினுள் எடுப்பது முக்கியமானதாகும். இத்துடன் வெளிநாட்டு முதலீடுகள் என்று எமது மக்களின் உயிரை நாமே குடிக்க முடியாது.
இத்தகைய திட்டங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் ஒரு நவகாலணித்துவ முறையாகவே காணப்படுகின்றமைகளை சுட்டிகாட்டலாம்.
மலையக தேசிய பேரிடர்கண்காணிப்பு குழு

http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu7D.html

Geen opmerkingen:

Een reactie posten