தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 maart 2015

புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது!

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதும் தேர்தல் முறையில் மாற்றமும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 12:36.20 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒழிக்கும் அதே நேரத்தில் தேர்தல் முறையிலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை விட தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தாம் அடிப்படை இணக்கத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSWSUmv3B.html

இலங்கை அகதிகள் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கை
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 12:55.26 PM GMT ]
தமிழக அரசின் புள்ளிவிபரங்களை பயன்படுத்தி, இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பான எழுத்து மூல அறிக்கை ஒன்றை இந்திய உள்துறை அமைச்சர் அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி வரையில், இந்தியாவில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 4 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 64 ஆயிரத்து 931 பேர் தமிழகத்தில் உள்ள 129 முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 37 ஆயிரத்து 73 பேர் பொலிஸ் நிலையங்களில் பதிந்து விட்டு முகாம்களுக்கு வெளியில் வாழ்கின்றனர்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் போது பேசப்பட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூன் அமைச்சர் மங்கள, இலங்கை அகதிகளின் விவகாரம் தொடர்பில் பேசியிருந்தார்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய அரசின் ஊடாக புனர்வாழ்வு செயற்பாட்டுக்கு உட்படுத்தி, மீண்டும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டத்திற்கு செல்வது என்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.


புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது!
[ வியாழக்கிழமை, 12 மார்ச் 2015, 01:19.03 PM GMT ]
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பாக சென்னையில் இந்து இளைஞர் சேனாவை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை மர்மநபர்கள் டிபன் பாக்ஸ் குண்டுவீசினர். உயிர், பொருட்கள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்து இளைஞர் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய 4 பேரை சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் இந்து இளைஞர் சேனாவை சேர்ந்த மகேந்திரன், முரளி, சிவா, சரவணன் என்றும், அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கோயம்பேட்டில் உள்ள இந்து இளைஞர் சேனா அலுவலகத்தில் இருந்து காவல்துறையினர் வெடிபொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே இந்து இளைஞர் சேனா அமைப்பை சேர்ந்த ஜெயம் பாண்டியன் என்பவர் மதுரை நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSWSUmv3G.html

Geen opmerkingen:

Een reactie posten