தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 maart 2015

100 நாட்களுக்குள் கைகளை அழுக்காக்கிய ரணில்



மோடி யாழ் விஜயம்! பேஸ்புக்கில் அதிக லைக்குகளை அள்ளிக் குவித்தார்!!..
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 01:34.45 PM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக் கணக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்திருந்தார்.
அப்புகைப்படங்களில் நகுலேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்த புகைப்படங்கள், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்தமை, பால் காய்ச்சியமை, வீடு கையளிப்பு என பல புகைப்படங்களை பதிவேற்றி இருந்தார்.
அதில் மோடியின் நகுலேஸ்வரம் கோயில் விஜயமும் விக்னேஸ்வரனை சந்தித்தமையும் அதிக விருப்புக்களைப் (Likes ) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோடியின் பிரச்சார உத்திகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryE.html


விபூசிகாவை தாயாருடன் இணைக்க நீதிமன்றம் மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 01:52.34 PM GMT ]
சிறுவர் இல்லத்தில் இருக்கும் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியுடன் இணைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் அனுமதி மறுத்துள்ளார்.
மகா தேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் தனது மகளை விடுவித்து, தன்னுடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ஜெயக்குமாரி.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டு பிற்பகலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜெயக்குமாரி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், என்.சுந்தர சர்மா, எச்.றைகான், எஸ்.துஸ்ஸியந்தி ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமி விபூசிகாவை விடுவித்து தாயாருடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் தமது வாதத்தில் எடுத்துக் கூறினர்.
ஜெயக்குமாரி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் பயங்கரவாத குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தாயார் தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி சிறுவர் இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுதலையாகவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரிடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே தாயாருடன் சிறுமியை சேர்க்க முடியும். அதுவரையில் சிறுமியை சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவிக்க முடியாது என்று நீதவான் தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த 10ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryF.html


100 நாட்களுக்குள் கைகளை அழுக்காக்கிய ரணில்
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 02:36.26 PM GMT ]
நாட்டின் புதிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது முதல் 100 நாட்களிலேயே தனது கரங்களை அழுக்காக்கி கொண்டுள்ளார்.
இவ்வாறு ஆங்கில இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடந்த கால ஊழல் களங்களை கொண்டிருக்கிறது. அதனை அழித்து விட முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் ஊழலற்ற, நம்பதன்மைக்கான பொறுப்பை ரணில் விக்ரமசிங்க வலியுறுத்த வேண்டும்.
மத்திய வங்கிகளின் ஊழல்கள் என்பது புதிதான விடயமல்ல. அது இலங்கையின் மத்திய வங்கியில் மாத்திரம் நடப்பதல்ல. ஏனைய மத்திய வங்கிகளிலும் நடப்பதுண்டு.
நிபுணர்கள் மற்றும் அறிஞர்களின் பொறுப்புடமையின் பலவீனமே ஊழல்களுக்கு காரணமாக அமைக்கின்றது. இலங்கையின் மத்திய வங்கி கடந்த ஒரு தசாப்த காலமாக சோர்வான நிலையிலேயே இருந்து வந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையின் மத்திய வங்கிக்கு தனது சொந்த ஆளுநரை நியமித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வேட்பாளரை பரிந்துரைத்து அந்த பாரம்பரியத்தை தொடர்ந்தார்.
இதன் காரணமாக பிரதமர் முதல் 100 நாட்களில் தனது கரங்களை அழுக்காக்கி கொண்டுள்ளார்.
இலங்கையின் முதன்மை அரச வங்கியான இலங்கை வங்கியின் அண்மைய வங்கி முறி பத்திரம் தொடர்பான ஒப்பந்ததில் ரணில் தலையிட்டுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணியும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பிருமான தலைமையிலான இலங்கை வங்கி மின்னல் வேகத்தில் கடன் வரி ஒப்புதல்களை வழங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரியின் வங்கி முறி பத்திர விலை மனு ஓப்புதல் குழுவின் மூலம் முதன்மை வர்த்தகரின் 3 பில்லியன் ரூபாவுக்கான வங்கி முறி பத்திரத்திற்கான கேள்வி மனு ஏற்கப்பட்டது.
விலைமனு குழுவில் புதிய ஆளுநர் மாற்றங்களை செய்திருந்தார். ஆளுநர்,.துணை ஆளுநர், பொது திணைக்களத்தின் மேலதிக அத்தியட்சகர் உட்பட உயர் அதிகாரிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
பொது திணைக்களத்தின் பொருளாதார ஆராய்ச்சிக்கு பொறுப்பான உதவி ஆளுநர், பொது திணைக்களத்தின் உள்ளக நடவடிக்கைகளுக்கான செயலாளர் ஆகியோரும் இந்த விலைமனு குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
வெளிப்படைதன்மை மற்றும் நல்லாட்சி என்பன சுதந்திர சதுக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிப் பிரமாணத்துடன் ஆரம்பமாகியது.
இலங்கை வங்கி, முதன்மை வர்த்தகருக்கான கேள்விமனுவை முன்வைப்பதில் ஏன் வழமைக்கு மாறான செயற்பாடுகளை கையாண்டது? இதன் அடிப்படையிலேயே முதன்மை வர்த்தகர் தனது விலைகளை முன்வைக்க வேண்டும்.
உண்மையை பாதாளத்திற்குள் புதைத்தால், அது ஒருநாள் அனைத்தையும் பற்றிக்கொண்டு வெளியில் வெடித்து கிளம்பி வெளியேறி ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தும்.
இது சந்தேகத்திற்கு இடமின்றிய வரலாற்றின் ஒரு அவமானமாகும். விலைமனு குழு நிமிடங்களுக்குள் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளது. நிதி அதிகாரம் கொண்டுள்ள தரப்பின் இந்த வெளிப்படுத்தலானது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும்.
கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சரியான பதிலை வழங்கவில்லை. சமாளிப்பதே அவரது நோக்கமாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் இலங்கை வங்கியின் தலைவருமான ரொனால்ட் பெரேராவை இந்த பிரச்சினையில் இருந்து தற்காக்க வேண்டிய தேவை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்தது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சட்டத்தரணிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இடம்பெற்றுள்ள தவறை மறைக்க வேண்டும் என்பதே இதன் பிரதான காரணம்.
இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருக்கும் முதன்மை வர்த்தகர் மற்றும் இலங்கை வங்கிக்கும், விசாரணையாளர்களும் இருக்கும் தொடர்புகளை அவர் வெளியிடுவதை தவிர்த்தார்.
அத்துடன் இலங்கை வங்கி, திறைசேரியின் முறி பத்திரம், அதன் சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களின் பெயர்களை இலக்கு வைப்பதை அவர் தவிர்த்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக கூறிய, மூன்று பேர் கொண்ட அந்த விசாரணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவின் பெயரையும் அவர் குறிப்பிட தவறினார்.
விடயங்கள் மூடி மறைக்கப்படாது எனக் கூறும் பிரதமர், நேரடியாக இலங்கை வங்கியின் ஊடாக 2 பில்லியன் பெறுமதியான வங்கி முறி பத்திரங்களும், 3 பில்லியன் பத்திரங்கள் திறைசேரி ஊடாகவும் கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.
நாடாளுமன்றத்தில் வங்கி முறி பத்திர வர்த்தகம் தொடர்பான தனது உரையில் பிரதமர், இந்த வர்த்தகத்தின் முக்கியமான உண்மையை வெளிக்கொணரவில்லை.
வங்கி முறிகளை பத்திரங்களை கொள்வனவு செய்யும் முதன்மை வர்த்தகர் தனது விலைகளை முன்வைக்க வேண்டும். அது நாட்டின் முன்னணி அரச வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வழமையான நடவடிக்கையாகும்.
முதன்மை வர்த்தகருக்கு வங்கி முறி பத்திரங்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஆதரவு இருக்கவில்லை என கூறப்படுகிறது. .இதனால், அவர் இலங்கை வங்கியிடம் 3 பில்லியன் கடனை பெற்றுள்ளார்.
இந்த விடயத்தில் பிரதமர் அவருடன் இருக்கும் பொதுமக்களின் சிறப்புரிமைகளை உறுதிப்படுத்தவில்லை. அவருடன் இருக்கும் நபர்களின் சிறப்புரிமைகளையே பாதுகாத்துள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRUSUlryG.html

Geen opmerkingen:

Een reactie posten