தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 mei 2014

தம்புள்ள பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்

இலங்கை அரச சேவையில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு

இலங்கை அரச சேவையில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஊழியப்படையினரால் பூர்த்தி செய்ய முடியாத சில கருமங்களை ஆற்றுவதற்கு வெளிநாட்டு ஊழியப்படையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 3000த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தொழில்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68861.html

தம்புள்ள பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்

தம்புள்ள பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. குறித்த பள்ளிவாசலை இடித்து விடப் போவதாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த கால சம்பவங்களின் காரணமாக இவ்வாறு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68864.html

Geen opmerkingen:

Een reactie posten