வெள்ளவத்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொகவந்தலாவ, கிளானி தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ஜெயராமன் புவனேஸ்வரன் என்ற இளைஞனே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன், பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக திம்புலப்பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பரி தோட்டத்தில் இந்நபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கண்டி, நுவரெலியா, தலவாக்கலை, பொகவந்தலாவை, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றியுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞன் கொள்ளை குற்றச்சாட்டில் தலவாக்கலை பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten