முதலாவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாயை, காலை 9.30 மணியளவில் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். அதையடுத்து, மாலைதீவு அதிபர் அப்துல் கயூமை காலை 10.05 மணிக்கு அவர் சந்திப்பார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை, காலை 10.30 மணியளவில் இடம்பெறும்.
இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, நாளை சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புக்கான கால அட்டவணையை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதையடுத்து. பூட்டான் பிரதமர், மொறிசியஸ் பிரதமர், நேபாள பிரதமர் ஆகியோரையும் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு மதியம் 12.10 மணியளவில் இடம்பெறும் அதையடுத்து, பங்களாதேஷ் சபாநாயகருடன் சந்திப்பு இடம்பெறும்.
இந்தச் சந்திப்புகளில் ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்புகளுக்கு மட்டும் 35 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகளுக்கு 25 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, மீனவர்களின் பிரச்சினை மற்றும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி நிலையான அசியல் தீர்வு ஒன்றை எட்டுவது ஆகிய இரண்டு விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/70717.html
Geen opmerkingen:
Een reactie posten