தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

மறுபடியும் காணாமல் போனோரை கண்டுபிடிக்க விசேட குழுவாம்!

யாழ் குடாநாட்டில் படைமுகாமிற்கு காணி சுவீகரிப்பு ஆரம்பம்..

யாழ்.குடாநாட்டில் மீண்டும் படைமுகாம்களிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதன் பிரகாரம் வடமராட்சியின் கரையோரக்கிராமமான திக்கத்தில் பொதுமக்களது காணிகளை சுவீகரிக்கும் வகையில் நில அளவீடு செய்யும் பணிகள் இன்று காலை முதல் படையினரது கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.
இதனிடையே ,இன்று காலை நில சுவீகரிப்பிற்கு ஏதுவாக நில அளவை செய்யும் பணிகளில் நில அளவைத்திணைக்கள பணியாளர்கள் ஈடுபட முற்பட்ட போது காணிகளது உரிமையாளர்கள் அதனை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளை கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்கள் சுகிர்தன் மற்றும் சிவாஜிலிங்கம், சிவயோகன் ஆகியோரும் தமது ஆதரவை தெரிவித்து அங்கு நேரில் பிரச்சன்னமாகியிருந்தனர். தம்மை நில அளவைபணிகளில் ஈடுபட அனுமதிக்காவிடின் காவல்துறையின் உதவியுடன் அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்போவதாக நில அளவைத்திணைக்கள பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படையினரது பிரச்சன்னத்தின் கீழ் தற்போது அங்கு அடாத்தாக நில அளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்நடவடிக்கைகளை கண்டித்து மக்களை அணி திரட்டிப் போராடப்போவதாக கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இதே வேளை காணி உரிமையாளர்கள் சட்டரீதியாக காணி சுவீகரிப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்;. அதே போன்று அச்சவேலியினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெருமளவு காணிகளை படையினரிற்கு கையகப்படுத்த ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கும் நில அளவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
http://www.jvpnews.com/srilanka/70924.html

மறுபடியும் காணாமல் போனோரை கண்டுபிடிக்க விசேட குழுவாம்!

போர் காலப்பகுதியில் காணாமாற்போனோர் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்க வேண்டும் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போர் காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை 18,580 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/70918.html

Geen opmerkingen:

Een reactie posten