தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

மோடி அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல்: 25 பேர் கைது!



தமிழனத்தை படுகொலை செய்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை இந்திய பாஜக அரசு வரவேற்று உள்ளதை கண்டித்து தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிற்பகல் 3.40 மணிக்கு பெரம்பூர் புகையிரத நிலையத்தை அடைந்த லால்பாக் விரைவு வண்டியை சுமார் 25 தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரயில் வண்டி ஓட்டுனர், ரயில் நிலையத்திற்கு தகவல் அனுப்பினார். காவல்துறை போராட்டக் களத்திற்கு வருவதற்கு சுமார் 20 நிமடங்கள் பிடித்தது. அதுவரை ரயில் வண்டியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் போராட்டக் குழுவினர்.
அதனையடுத்து, முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்தனர். இதனால் சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் ரயில் வண்டிகள் சுமார் 40 நிமிடங்கள் தாமதமானது.
“கொடுங்கோலன் ராஜபக்சவே திரும்பிப் போ” என்ற முழக்கமும், “தமிழ்நாட்டை அவமானப்படுத்திய பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்கள் முன்வைக்கப் பட்டது.
போராட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுத்த தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான் உட்பட 25 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten