களுத்துறை கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
களுத்துறை, தொடம்கொட பொம்புவல இறப்பர் தோட்டத்தில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவினரை கைதுசெய்வதற்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தனார்.
‘ஒருவாரத்திற்கு உன்னை வெலிகமவிற்கு அனுப்புவேன்’ என்று கூறியே தன்மீது அக்குழுவினர் தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார். அக்குழுவில் தெற்கை சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவரும் இருந்ததாக கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; கொட்டாவை காவலரணில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகஸ்தரே தாக்குதலில் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கூடுதலான வேகத்தில் வாகனத்தை செலுத்தியமைக்காக இந்த கான்ஸ்டபிளே தண்ட பற்றுச்சீட்டை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்தே அந்த அரசியல்வாதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் அண்மையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/71343.html
இலங்கை மீதான விசாணைக்கு முன் இந்தியா விரைகிறார் நிசா பிஸ்வால்
வரும், ஜூன் 6ம் நாள் தொடக்கம், 9ம் நாள் வரை புதுடெல்லியில் தங்கியிருக்கும் அவர், இந்தியாவின் புதிய அரசின் அதிகாரிகளைச் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தியாவின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் மட்ட அதிகாரி ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
நிஷா பிஸ்வால் தமது பயணத்தின் போது, பிராந்திய விவகாரங்கள் குறித்து, இந்திய அரசதரப்புடன் பேசவுள்ளார். இதன்போது சிறிலங்கா விவகாரம் குறித்தும் அவர் முக்கியமாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்மோகன்சிங் அரசாங்கம் பதவியில் இருந்த போது, கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், இந்தியா நடுநிலை வகித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், இன்னும் சில நாட்களில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
நிஷா பிஸ்வாலின் புதுடெல்லிப் பயணத்துக்கு முன்னதாகவோ- அதனை ஒட்டியதாகவோ இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளுடன் அவர் முக்கியமாக ஆலோசிப்பார் என்று நம்பப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/71354.html
Geen opmerkingen:
Een reactie posten