தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 mei 2014

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலி உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

புதுடெல்லியின் பயங்கரவாத எதிர்ப்புக்கு இலங்கை துணையிருக்கும்: மோடியின் பதவியேற்பு விழாவில் மஹிந்த
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 05:03.35 PM GMT ]
புதுடெல்லியின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொழும்பு துணையாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்த பின்னர் கருத்துரைத்த, மஹிந்த ராஜபக்ச,
புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்தை பாராட்டுவதாக குறிப்பிட்டார்.
நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு காரணமாகவே அவருக்கு வெற்றியை இந்திய மக்கள் பரிசாக வழங்கியுள்ளனர். அந்த வெற்றி, இந்திய அரசியலின் அபிலாஷைகளை பூரணப்படுத்தும் என்றும் ராஜபக்ச கூறியுள்ளார்.
மாற்றம் ஒன்றை கருதியே இந்திய மக்களை நரேந்திர மோடியை தெரிவுசெய்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்தும் தீர்க்கமானதாக இருக்கும் என்று ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjr5.html

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலி உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு
[ திங்கட்கிழமை, 26 மே 2014, 11:37.32 PM GMT ]
மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று விமானம் ஊடாக கொழும்பை சென்றடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் அழைத்துச் செல்ல இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்தனர்.
சந்தேக நபர்களை மலேசிய பொலிஸார் இலங்கைப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்;கப்படுகிறது.
2004ம் ஆண்டு முதல் குறித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் நிதி திரட்டியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மலேசியாவின் சொலாங்கூர் பிரதேசத்தில் தங்கியிருந்த மூவரையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjr6.html

Geen opmerkingen:

Een reactie posten