[ புதன்கிழமை, 28 மே 2014, 01:20.08 PM GMT ]
அதேவேளையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று, அவரது குழுவில் ஒருவராக புதுடெல்லி சென்று, பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி கடந்த மத்திய மாகாணசபை தேர்தல் வேளையிலும், அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் வேளையில் தனது மகிந்த சிந்தனை வேலை திட்டத்திலும், வழங்கியிருந்த மலைநாட்டு தொழிலாளருக்கு காணி, வீடு என்ற மகத்தான வாக்குறுதியை புதுடெல்லி வரை போய் வந்த ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றி காட்ட வேண்டும்
வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு, இன்று அதற்காக ஒரு சதமேனும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், மிக நீண்ட காலமாக வெறும் வாய்ப்பேச்சாக மாத்திரம் இருந்துவரும் மலையக தோட்ட தொழிலாளருக்கான வீடமைப்பு திட்டம், இனிமேலும் தாமதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மலையகத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் முஸ்தீபுகள் செய்யப்படுகின்றன. இந்த திட்டமும், இந்திய அரசு வடக்கில் வீடுகள் கட்டி கொடுக்க ஆரம்பித்ததை அடுத்தே மலையகத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்குக்கு காட்டப்படும் அதேவிதமான அக்கறையை மலையகத்துக்கும் காட்ட வேண்டுமென்ற கோரிக்கை எப்போதும் அனைத்து மலையக அரசியல் தலைமைகளினாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை இன்று இந்திய அரசு புரிந்து ஏற்று கொண்டுள்ளது.
ஆனால், இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தை சுட்டிக்காட்டி இலங்கை அரசு தன் சொந்த நாட்டு மக்கள் தொடர்பான கடமையில் இருந்து நழுவ முடியாது.
மேலும் இந்திய அரசின் திட்டத்தின் மூலம் ஆக 4,000 வீடுகளே மலைநாட்டில் கட்டப்படவுள்ளன. எனவே குறைந்தபட்சம் 50,000 வீடுகளாவது மலைநாட்டில் கட்டப்பட வேண்டும் என்பதுவே எங்கள் எதிர்பார்ப்பு.
இந்நிலையில் இலங்கை அரசு, தனது பங்காளிகளாக இருக்கின்ற மலைநாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வேளைகளில் அளிக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி அரசாங்கத்துக்கு மலையக பங்காளி கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த செயற்பாட்டில் ஜனாதிபதியுடன் புதுடெல்லி வரை போய் வந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முதன்மை வகிக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZiq5.html
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சாவகச்சேரியில் இருந்து வந்தவர்களாம்! இராணுவம்
[ புதன்கிழமை, 28 மே 2014, 12:54.05 PM GMT ]
பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த காணிக்கு காணி உறுதிகள் எதுவுமில்லை. இதனால் அதன் உரிமை யாருடையது என்பதை அறிவது சிக்கலாக இருக்கின்றது.
அந்த காணிக்கு அருகில் உள்ள இடத்தையே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் தின உரையை நிகழ்த்த பயன்படுத்தி வந்தார்.
பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள் கிளிநொச்சி மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மக்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZiq4.html
Geen opmerkingen:
Een reactie posten