யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் சந்திரகுமார் எம்.பி. ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டது.
கஜதீபனைப் பார்த்து தறுதலை வாத்தி என சந்திரகுமார் திட்ட, பதிலுக்கு அவரும் சந்திரகுமாரை தறுதலை எம்.பி. எனத் திட்டினார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏக வசனங்களில் திட்டித் தீர்த்துக்கொண்டனர்.
மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு தொடர்பாக ஈ.பி.டி.பி. – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் அதுகுறித்து பேச எழுந்த கஜதீபனை சந்திரகுமார் திட்டடியதை அடுத்தே இருவரும் தனியாக மோதிக்கொண்டனர்.
ஒருபுறம் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கடும் தர்க்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம், சந்திரகுமார் எம்.பி.க்கும் கஜதீபனுக்கும் இடையில் வார்த்தைப் போர் நடந்துகொண்டிருந்தது.
http://www.jvpnews.com/srilanka/70661.html
Geen opmerkingen:
Een reactie posten