தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது! ஈ.மெயில் தமிழன்!


சம்பூர் அனல்மின் திட்டத்தை துரிதப்படுத்த மகிந்தரும் “டுவிட்டறில்” விளையாட்டு

சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி திட்டத்தின் அமுலாக்கத்தை துரிதப்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி உத்திரவிட்டுள்ளார்.
இந்த தகவல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்தவிடம் மோடி கூறியவை என்ன?
* தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும்.
* பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும்.
* ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும்.
இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவிடம் எடுத்துக் கூறினார் என புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் .
நேற்று இந்தியப் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு சுமார் 20 நிமிட நேரமே நீடித்தது.
எனினும், எந்த இழுபறியுமின்றி எடுத்த எடுப்பிலேயே நேரடியாக விடயத்தைக் கையாளும் ஓர் இறுக்க நிலையே அந்த இருபது நிமிட நேரமும் நீடித்தது என நம்பகரமாக அறியவந்தது.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தல், படையினரை விலத்தி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தல், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைக்குக் கையளித்தல் ஆகிய மூன்று விடயங்களையும் எடுத்த எடுப்பிலேயே இந்தியப் பிரதமர் பிரஸ்தாபித்தாராம்.
அவற்றைச் செயற்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமாயின் இந்தியா நேரடியாகத் தலையிட்டு உதவத் தயாராக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டாராம்.
இந்தியப் பிரதமரின் காட்டமான இந்தக் கருத்துக்கு நேரடியாகப் பதில் கூறமுடியாத இலங்கைத் தரப்பு இந்த விடயங்களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்தி விடமுடியாது, இப்போதுதான் யுத்தம் முடிவடைந்திருக்கின்றது, இன்னும் காலம் பிடிக்கும் என்ற சாரப்பட பதிலளிக்க முயன்றதாம்.
“இல்லை, இல்லை. ஏற்கனவே யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. இதற்கு மேலும் காலம் தேவைப்படும் என்று கூறுவது அர்த்தமற்றது.” – என்ற பாணியில் பதிலளித்த இந்தியப் பிரதமர் தமது வெளிவிவகாரச் செயலாளர் சுஜாதா சிங் பக்கம் திரும்பி, ஏற்கனவே இந்தியப் பிரதமராகவிருந்த மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தரப்பில் கூறப்பட்ட உறுதிமொழி என்ன என்று கேள்வி எழுப்பினராம்.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது என்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பதிலளித்தார்.
அளித்த உறுதிமொழியை விரைவில் நீங்கள் நடைமுறைப்படுத்துவதை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம் என்று மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார் என புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் புதிய பிரதமரின் இறுக்கமான நிலைப்பாடும் அதனை அவர் கோடிகாட்டிய விதமும் இலங்கைத் தரப்பினருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது என்றும் கூறப்பட்டது. 1980 களின் ஆரம்பத்தில் இலங்கை விவகாரத்தைப் புதுடில்லி கையாண்டபோது காட்டப்பட்ட இறுக்கத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் கொழும்பு எதிர்கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது என்று அந்தப் புதுடில்லி வட்டாரங்கள் ‘மலரும்’ இணையத்துக்குத் தெரிவித்தன.
Mahinda-Modi-Meeting

தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது! ஈ.மெயில் தமிழன்

மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பதிவினை அவர் இட்டுள்ளார்.
// If Rajapaksa can enter India, then it’s time for Tamilians to exit India. Death to Rajapaksa — butcherer of Tamilians! //
- Message from the inventor of Email.
ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழையமுடியும் என்றால் , தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது. தமிழினக் கொலைகாரன் ராஜபக்சேவிற்கு மரணம் உரித்தாகட்டும்.
இவ்வாறு தனது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நிலைத்தகவலிட்டுள்ளார் சிவா
emai1
emai2

Geen opmerkingen:

Een reactie posten