இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்
[ சனிக்கிழமை, 31 மே 2014, 12:13.16 PM GMT ]
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா நேற்று நடந்த கூட்டம் தொடர்பாக ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டதாகவும் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்கவும் குறுக்கறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீளவும் தானும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.
நேற்று நடந்த கூட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை கற்றல் செயற்பாடுகள் செயற்பாடுகளுக்கு இடையூறாக இராணுவம் மற்றும் வெளியார் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை விடுத்த வேண்டுகோளை அடுத்து,
இனி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவம் உட்பட யாரும் கற்றல் செயல்பாடுகளை குழப்பும் வகையில் பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டாமென கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த செய்திகள் ஊடகங்களில் ஒலி, ஒளி வடிவில் வெளிவந்திருந்தன. அந்த செய்திகளில் திரிபுபடுத்தல் இருக்கவில்லை. இன்று கூட்டம் ஆரம்பமானபோது கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை கற்றல் செயல்பாடுகளுக்கு இடையூறாக இராணுவம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென தான் மீளவும் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
தான் யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும் ஒரு நல்ல காரியம் நடக்க ஒத்துழைக்க வேணடுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதுபோல நேற்றைய கூட்டத்தில் சமூர்த்தி பயளாளிகள் தெரிவில் தவறுகள் நேர்ந்துள்ளதையும் பணக்காரர்கள் முதலாளிகளுக்கும் சமூர்த்தி வழங்கப்பட்டிருப்பதாக பா.உறுப்பினர் சந்திரகுமார் கூறியதற்கான ஒலி, ஒளி ஆதாரங்களை ஊடகங்கள் வைத்துள்ளன என்பதால் அச்செய்திகளிலும் திரிபுகள் இருக்க வாய்ப்பில்லை.
பொறியிலாளர் பாரதிதாசன் விவசாயிகளிடம் வாங்கிக்கட்டினார்.
இரணைமடு விடயத்தில் முதல்வர் முக்கிய கவனம் செலுத்தி கருத்துரைத்தார். இன்றைய கூட்டத்தில் பிரதானமாக தண்ணீர் தொடர்புபட்ட பகுதியே ஆராயப்பட்டது.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கான இரணைமடுவின் நீர் விநியோகத் திட்டத்தின் சூத்திரதாரிகளில் பிரதானமானவராக கருதப்படுகின்ற தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் பாரதிதாசன் கிளிநொச்சி மாவட்டத்தின் தமது சபையால் நடைமுறைப்படுத்தப்படும் நீர் விநியோகங்கள் நிலுவையில் இருக்கும் நீர் விநியோக திட்டங்கள் தொடர்பாக விரிவான புள்ளிவிபரங்களுடன் நீண்ட நேரமாக விளக்கமளித்ததை தொடர்ந்து.
சரியான தருணத்தில் வாய் திறந்த இணைத்தலைமையும் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் பொறியியலாளர் பாரதிதாசனிடம் யாழ்ப்பாணத்துக்காக இரணைமடு நீர்விநியோகம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கோரினார்.
அதில் யாழ்ப்பாணத்தில் இருந்தே யாழ்ப்பாண மக்களுக்கான நீர் விநியோகம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கிளிநொச்சியில் கடும்வறட்சி ஏற்பட்டு இரணைமடுவில் நீர் பற்றாக்குறை எற்படுகின்றபோது அதற்கான மாற்றுத்திட்டம் உள்ளடங்குகின்றன.
முதலமைச்சரின் கேள்விகளுக்கு அவை ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கங்களை பொறியியலாளர் பாரதிதாசன் வழங்கவில்லை. அவருடைய கருத்துக்கள் விளக்கங்கள் அனைத்தும் விவசாயிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது திட்டம் நிறைவேற்ற அடம்பிடிப்பதாகவே இருந்தது. இது விவசாய பிரதிநிதிகளுக்கு கடும் விசனத்தை ஏற்ப்படுத்தியிருந்தது.
சிறீதரன் மீண்டும் தீர்க்கமான முடிவு
இரணைமடு நீர்விநியோகம் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பா.உறுப்பினர் சபையில் கருத்துவெளியிட்டபோது,
கிளிநொச்சி மக்களின் நீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்பே ஏனைய எதுவெனினும் என முடிவாக கூறிவிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 21ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை இரணைமடு நீரின் கீழ் செய்யப்படுவதாகவும் குளம் திருத்தப்படும் பட்சத்தில் மேலும் 15 ஆயிரம் ஏக்கர் பயிர் செய்யமுடியுமென நீர்ப்பாசன பொறியியலாளர் சுதாகரனின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
முதலில் மேற்படி நீர்விநியோத்திற்கான திட்டநிதியை பயன்படுத்தி முதலில் இரணைமடுக்குளத்தின் அணைகள் உட்பட குளத்தை திருத்தி அதன் பிறகு ஏற்படும் நீர் தொடர்பான யதார்த்தமான சூழலை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாமென கருத்து வெளியிட்டார்.
அம்பலமான மனோகரன்! அம்பலப்படுத்திய அமைச்சர் ஜங்கரநேசன்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரும் விவசாய பிரதிநிதியுமான சுப்பையா மனோகரன் கருத்து வெளியிட்டபோது,
தானும் இந்த மாவட்டத்தின் மூத்த குடிமகன் என்றும் கிளிநொச்சி விவிசாயிகளின் பிரச்சனைகளில் தான் அன்றுதொட்டு இன்றுவரை முன்னிற்பதாகவும் உரத்தகுரலில் அடுக்கிக் கொண்டேபோனார்.அதன் போது யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி விவசாயிகள் பெரும் நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார்.
முன்னதாக மனோகரன் பேச ஆரம்பித்தபோது நீர் இந்த விநியோகத் திட்டத்தில் கையொப்பமிட்ட மனோகரனோ என முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆச்சரியம் கலந்துதொனியில் வினாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்துக்கான இந்த நீர் விநியோக திட்டத்தில் கிளிநொச்சி விவசாயிகளின் கருத்துக்களை அறியாமல் அரசாங்கத்தோடு சேர்ந்து கையொப்பமிட்டவர் என சுப்பையா மனோகரன் மீது குற்றம் சாட்டப்படுகின்றது.
இதேவேளை ஆவணம் கொண்டுவந்திருந்து அமைச்சர் ஜங்கரநேசன் 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் சுப்பையா மனோகரன் இந்த திட்டத்தை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டதுடன், இத்திட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார் என்பதற்கு ஆதாரமான அறிக்கையை அமைச்சர் ஜங்கரநேசன் இணைத்தலைமைகள் அதிகாரிகள் முன் அம்பலப்படுத்தினார்.
இந்த நீர் விநியோகம் தொடர்பில் அதன் நிதி திரும்பிவிடும் என பொறியியலாளர் கூறும் கருத்துக்களை நிராகரித்ததுடன் அமைச்சர் என்றவகையில் இது தமது அமைச்சும் முடிவெடுக்கும் எனவும் நிதி திரும்பிவிடும் என்பதற்காக மக்கள் விரோத திட்டங்களுக்கு ஒத்துழைக்க முடியாது என அமைச்சர் ஜங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.
மிகவும் தீர்க்க முடிவுடன் கருத்துக்களை முன்வைத்த விவசாய பிரதிநிதிகளான சிவமோகன், கணபதிப்பிள்ளை, சிவப்பிரகாசம்
இன்றைய கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளான சிவமோகன், கணபதிப்பிள்ளை, சிவப்பிரகாசம் ஆகியோர் கிளிநொச்சி விவசாயிகளின் கடந்தகால நிலைமைகள் எதிர்கால நிலைமைகள் தொடர்பாக விரிவான விளக்கத்தை அளித்தனர்.
இரணைமடுவுக்கு நீர் விநியோகத்திட்டம் என்பது சுத்தமான குடிநீர் திட்டமல்ல அது யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோக திட்டம் அது பரந்த விடயங்களை உள்ளடக்குகின்றது.
இந்த திட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கை விடயம் பற்றி குறிப்பிடபடவில்லை. இரணைமடு குளத்தின் நீரின் கீழ் பயிர்செய்யும் விவசாயிகளின் எதிர்கால நிலைமைகள் தொடர்பாக கவனிக்கப்படவில்லையென குற்றம் சுமத்தினர்.
இத்திட்டம் தொடர்பான ஆய்வுகள் ஏ தரத்தில் செய்யப்படவில்லையென மேலும் தெரிவித்ததுடன், உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான சுத்தமான குடிநீர் தேவையெனில் கிளிநொச்சியில் வைத்து போத்தலில் அடைத்துக்கொடுக்கலாமே என ஆலோசனைகள் கூறினர்.
தாம் யாழ்மக்களுக்கு நீர் கொடுப்பதற்கு தடையற்றவர்கள் ஆனால் கிளிநொச்சி மக்களின் நீர்த்தேவை முழுமையாக பூர்;த்தி செய்யப்பட்டபின்புதான் நீர்விநியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
நீரை எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் பண்பில் வித்தியாசங்கள் உண்டெனவும் தெரிவித்தனர். பொறியியலாளர் பாரதிதாசன் முன்னுக்குபின் முரணான கருத்துக்களை வெளியிடுவதுடன் பிரதேசவாதத்தை தூண்டும் வடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் எனவும் குற்றம் சுமத்தினர்.
தேசிய நீர் வடிகாலமைப்பு சபையால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் மீது கண்டனம்
யாழ்ப்பாணத்துக்கான இரணைமடு நீர் விநியோகத் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் கருத்துக்களை மீறி கொண்டுசெல்ல இயங்கிவரும் தரப்புக்களுடன் இணைந்த நீர் வடிகாலமைப்புச் சபை பத்திரிகைகளில் பிரதேச வாதத்தை தூண்டும் வகையிலும் யாழ் மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் மேற்கொண்டுவரும் விளம்பரங்களை அமைச்சர் ஜங்கரநேசன் கண்டித்தார். இப்படியான விளம்பரங்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
தென்னிலங்கை மக்களை ஏமாற்றக் காட்டப்படும் விழுந்து கிடக்கும் நீர்தாங்கியை அகற்ற நடவடிக்கை
கிளிநொச்சியில் காக்கா கடைச்சந்திக்கு அண்மையாக இருந்த பெரிய நீர்தாங்கி போர்காலத்தில் பெரிதும் நீர்விநியோகத்திற்கு பயன்பட்டுவந்தது.
2009 போரின்போது குண்டு வைத்து தகர்க்கப்பட்டு வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியை சுற்றி மதில்கட்டிய சிங்கள படைகள் அந்த நீர்தாங்கியை தென்னிலங்கையில் இருந்துவரும் மக்களை ஏமாற்றுவதற்கும் தமது வீரப்பிரதாபங்களை சொல்லவும் இந்த உடைந்து வீழ்ந்த நீர்த்தாங்கியை காட்சிப் பொருளாக்கினர்.
இந்த நீர்தாங்கிக்குள்தான் பிரபாகரன் இருந்ததாக சிங்கள மக்களுக்கு சிப்பாய்கள் சொல்ல அதை வேதமென நம்பி பூரித்துப்போயினர். அழகான கிளிநொச்சியில் வடுவாக இருக்கும் அந்த நீர்த்தாங்கியை அகற்றக்கோரி பலதடவைகள் இப்படியான இணைத்தலைமைக் கூட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையால், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராசாவால் கருத்துக்கள் பலவருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நீர்த்தாங்கிக் காணி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதன் காரணமாக அங்கு அமைக்கப்பட வேண்டிய புதிய கிளிநொச்சிக்கான புதிய நீர்தாங்கியை இரத்தினபுரம் வீதியில் ஒரு பள்ளக் காணியில் பாடசாலைக்கு சொந்தான நிலத்தில் அமைக்கப்படுகின்றது.
அக்காணியில் ஒரு மாவட்ட நூலகம் அமைப்பதற்கான ஆலோசனை முதலில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படியான கூட்டங்களில் எடுப்பட்ட முடிவுகள் பல நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக இராணுவத்தோடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் உடைந்து கிடக்கும் நீர்த்தாங்கியை போர்ச் சின்னமாக காட்சிப்பொருளாக மாற்றி இருக்கும் நிலையை தவிர்த்து அதை வேற அபிவிருத்தி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி பா.உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் வலியுறுத்தினர்.
சட்ட விரோத கட்டிடம் கட்டினார் கிளிநொச்சி அரச அதிபர் அம்பலம்
இன்றைய கூட்டத்தில் புதிதாக கட்டப்படும் கிளிநொச்சி கச்சேரியின் காணி பிரதேசசபைக்கு சொந்தமானது.கட்டிடம் கட்டுவதற்கு கரைச்சி பிரதேச சபையிடம் அனுமதி எடுக்கப்படவில்லை என்பது பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடுத்த வினாமூலம் அம்பலமாகியுள்ளது. இதை கிளிநொச்சி அரசாங்க அதிபரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhv5.html
டென்மார்க்கில் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்
[ சனிக்கிழமை, 31 மே 2014, 12:56.09 PM GMT ]
Holbæk நகரத்ததில் நடைபெற்ற Carnival நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டனர்.
உலகில், அநாகரீகமாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் மனித நேயம் அறவே அற்ற, இரத்த வெறிபிடித்த, கொடிய சிறீலங்கா அரசைக் கண்டிக்கத் தவறிய, ஐ.நா.வையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
மானிட வரலாற்றில் இப்படி ஒரு இனப்படுகொலை இதுவரை நிகழ்ந்ததில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கதென, தங்களின் ஆதங்கங்களை முன்வைத்தார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி தமிழீழ மண்ணில் ஒரு இனவழிப்பை சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றியது.
தொடர்த்தும் எமது தாயக பூமியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களையும் நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாசார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிறுவியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றது.
இதைத் தடுப்பதற்காக டென்மார்க் அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த நிகழ்வில் டெனிஸ் மக்களுக்கு டெனிஸ் மொழியில் திசைகள் இனளயோர் அமைப்பினர்கள் விளக்கம் கொடுக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி தமிழீழ மக்கள் மீது நடத்தப்படுக் கொண்டிருக்கின்ற இனவழிப்பை விளங்கப்படுத்தியுள்ளார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhv7.html
Geen opmerkingen:
Een reactie posten