தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 mei 2014

அவுஸ்திரேலிய அரசாங்கம் நஞ்சுக்கு ஒப்பான அகதி கொள்கையை பின்பற்றுகிறது!– பசுமை கட்சி

முள்ளியவளையில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு
[ சனிக்கிழமை, 31 மே 2014, 04:59.18 PM GMT ]
முள்ளியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 28ம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளை 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஜெயன்( வயது 37) என்பவரே காணாமற்போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் தனது பிள்ளையையும், அவருக்கு உதவியாக இருக்கும் மனைவியையும் கடந்த 28 ம் திகதி பார்வையிட்டுவிட்டு அன்று மதியம் 1 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து திரும்பிய அவர் காணாமற்போயுள்ளார் என அவரது உறவினர்களால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhw3.html
அவுஸ்திரேலிய அரசாங்கம் நஞ்சுக்கு ஒப்பான அகதி கொள்கையை பின்பற்றுகிறது!– பசுமை கட்சி
[ சனிக்கிழமை, 31 மே 2014, 03:18.09 PM GMT ]
ரொனி அபோட் தலைமையிலான அவுஸ்திரேலியா அரசாங்கம் நஞ்சுக்கு ஒப்பான அகதிகள் கொள்கையை பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பசுமை கட்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடும் இன்னல்களுக்கு மத்தியில் சிறந்த வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இலங்கையில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலியா வருகின்றனர்.
ஆனால் அவர்களை நாடுகடத்தவும், முகாம்களில் அடைத்து வைக்கவும் வழி செய்கின்ற அவுஸ்திரேலியாவின் சட்டம் நஞ்சுக்கு ஒப்பானது என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhw2.html

Geen opmerkingen:

Een reactie posten