குருவில்வான் மக்களின் நிலத்தில் இராணுவத்தின் பதாதை…
காணி அபகரிப்பின் ஓர் அங்கமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறுமாறு வனவள ஜீவராசிகள் திணைக்களத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறுமாறு வனவள ஜீவராசிகள் திணைக்களத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை அடுத்து குறித்த பகுதியில் வாழ்ந்துவரும் 14 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலபெருமாள்கட்டு கிராமசேவகர் பிரிவிலுள்ள குருவில்வான் கிராமம் கட்டுக்கரை குளத்தை அண்டிய செழிப்புமிக்க பிரதேசமாகும்.1972ஆம் ஆண்டு குறித்த பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்து வந்துள்ளன.
இங்கு கட்டுகரை குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதுடன் மீன்களை பதப்படுத்தும் போறணைகளும் அமைக்கப்பட்டு மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் மேட்டு நிலப் பயிர்செய்கை மூலம் கடலை, கௌப்பி மற்றும் முந்திரிகை, மா, பலா, புளி ஆகியனவற்றின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி செழிப்பாக வாழ்ந்து வந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து குறித்த மக்கள் இந்தியாவின் தமிழ்நாடு உட்பட இலங்கையின் பலபாகங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் யுத்தம் முடிவடைந்து சாதகமான சூழ்நிலையை ஏற்பட்டதை அடுத்து மீண்டும் இந்தக் கிராமத்தில் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முன்பு செய்த தொழிலையே இப்பிரதேச மக்கள் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு அரசாங்க உதவியுடன் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த 7 மீனவ சங்கங்களைச் சேர்ந்த 120 அங்கத்தவர்களுக்கு 46 நன்னீர் மீன்பிடிக்கான வள்ளங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இங்கு வசிக்கும் மக்களின் தேசிய அடையாள அட்டையில் வதிவிடம் குருவில்வான என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று அரச சார்பற்ற நிறுவனங்களால் இவர்களுக்கான தற்காலிக குடிசைகளை அமைத்துக் கொடுத்துள்ளதோடு குழாய்கிணறும் அமைத்து கொடுத்துள்ளது.





http://www.jvpnews.com/srilanka/71292.html
யாழ் நாவற்குழி பாலத்தை அகற்ற முயற்சி..
வடபகுதிக்கான போக்குவரத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் அரசின் திட்டங்களில் யாழ்ப்பாணம் நோக்கிய புகையிரத சேவை- தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் திறன்மிகு சேவைகளை கண்காணித்தல் எனும் வரிசையில் நாவற்குழி பாலத்தை அகற்றும் வேலைத்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தப்பாலம் தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பிரதான நுழைவாயிலாக அமைவதுடன்- தினந்தோறும் அதிகளவான உள்ள10ர் மக்கள் சுற்றுலாப்பயணிகளென அதிகமானோர் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஒரே தடவையில் கூடுதலான அளவு வாகனங்கள் குறித்த பாலத்தால் பயணிப்பதால் வலிமைமிக்க தகரப்பாலம் அடிக்கடி சேதமாவதாகவும்- இதனால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு பராமரிப்பு செலவினம் அதிகரித்தும் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அதிரிக்கும் செலவினத்தை கட்டுப்படுத்தவும்- குறித்த பகுதிக்கான போக்குவரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் சிறந்த வழியாக மேற்படி பாலத்தை அகற்றி அதற்கு பதில் நிலத்தொடர்புள்ள நீண்ட வீதியாக ஆக்குவதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆழம் குறைந்த கடலில் இப்பாலம் அமைந்துள்ளதால் இம்முயற்சி சாதகமாக அமையலாம் எனவும்- இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் சுமார் ஒரு வருடத்திற்குள் அதனை நிறைவு செய்து விடலாம் எனவும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

http://www.jvpnews.com/srilanka/71300.html
Geen opmerkingen:
Een reactie posten