தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

மகிந்தவின் அழைப்பை முதலமைச்சர் “CV” ஏற்காத கவலையில்! சம்பந்தி வாசு

ஜனாதிபதியின் அழைப்பை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஏற்றிருந்தால் அது இருதரப்பினருக்கிடையே புதியதொரு பயணத்திற்கான ஆரம்பமாக அமைந்திருக்கும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பாக சமூக ஒருமைப்-பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பானஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வைபவத்தில் தன்னோடு கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு விடுத்த அழைப்பு முக்கியத்துவமிக்கதாகும். இந்த அழைப்பை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இதனால் வடமாகாணத்தின் பிரச்சினைகள் அணைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதாக நான் கூற முனையவில்லை.அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்குமிடையே புதியதொரு இணக்கப்பாட்டிற்கு புதிய பயணத்திற்கு இது வழிவகுத்திடும். அத்தோடு ஜனாதிபதியுடன் முதலமைச்சர் இந்தியா சென்றால் அது வடக்கில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையென்ற தொழிற்பாட்டை இந்தியாவில் ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முதலமைச்சர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதென்பது மத்-திய அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஆரம்பமாகும் என்பதே எனது நிலைப்பாடாகும். மோடியின் பதவியேற்பு வைபவத்தில் சார்க் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது சார்க் வலயத்தில் இந்தியாவின் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் காய் நகர்த்தல்களை இந்த அழைப்பு விடுத்ததன் மூலம் மோடி ஆரம்பித்துள்ளார்.
இது அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல் அல்ல. மோடியின் இராஜதந்திர நிகழ்ச்சி நிரலாகும். அத்தோடு எதிர்காலத்தில் இந்தியா சீனாவுடன் நல்லுறவை பேணி உறவுகள் பலப்படுத்தப்படுமானால், ஆசியாவின் வல்லரசுகளாக இரண்டு நாடுகளும் உருவெடுக்கும். அதன் பின்னர் வேறு எவரும் “வாலாட்ட” முடியாது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/70724.html

Geen opmerkingen:

Een reactie posten