தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 mei 2014

இலங்கையில் மத அடிப்படைவாதம் மக்கள் கவலையில் பிரித்தானியத் தூதுவர்

பிரதமர் மோடியின் வெளியுறவு ஆலோசகராக பாரத்தசாரதியின் முக்கிய சகா…

இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பாரத்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருக்கும் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை மோடி தமது ஆலோசகராக நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்பிரமணியன் ஜெய்சங்கர் டெல்லியில் பிறந்தவர். மத்திய அரசு ஊழியரும் அரசியல் விமர்சகருமான கே.சுப்பிரமணியத்தின் மகனே ஜெய்சங்கர் . அவரது சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியன் வரலாற்று ஆய்வாளர்.
1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் இணைந்தார் சுப்பிரமணியன் ஜெய்சங்கர். 1979 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியனுக்கான இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதிக்கு சிறப்பு உதவியாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து 1989- 90ஆம் ஆண்டு இலங்கையில் நிலை கொண்ட இந்திய அமைதிப்படயின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதன் பின்னர் ஜப்பான், சீனா நாடுகளுக்கான தூதராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71385.html

இலங்கையில் மத அடிப்படைவாதம் மக்கள் கவலையில் பிரித்தானியத் தூதுவர்

சிறிலங்காவில் மத அடிப்படைவாதம் குறித்து மக்கள் கவலையடைந்துள்ளதாக, பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் பயணத்தை மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது தன்னுடன் பேசியவர்கள் அனைவரும், மத அடிப்படைவாதம் குறித்து கவலையும் எதிர்ப்பும் தெரிவித்ததாகவும், பிரித்தானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரவில் சிறிமாபோதி, ருவான்வெலிசய ஆகியவற்றுக்கும், மன்னாரில் மடுத் தேவாலயம், திருக்கேதீஸ்வரம் ஆலயம் மற்றும் புத்தளத்தில் பெரிய பள்ளிவாசலுக்கும் சென்ற இவர், மதப் பெரியார்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அத்துடன் உள்ளூர் அரச்சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநதிகளையும் இவர் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது இங்குள்ள மக்களும் பிரதிநிதிகளும் தமக்குள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறியதாகவும், பிரித்தானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71357.html

Geen opmerkingen:

Een reactie posten