[ சனிக்கிழமை, 31 மே 2014, 02:57.30 AM GMT ]
இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. டொவால், இந்தியாவின் பாதுகாப்பு நிபுணராக கருதப்படுகிறார்.
டொவலை பொறுத்தவரை அவர் உள்ளக பாதுகாப்பு விடயங்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு பாதுகாப்பு விடயங்களிலும் பரீட்சமானவர்.
பயங்கரவாத தடுப்பு விடயங்களிலும் எல்லைப்பாதுகாப்பு விடயங்களிலும் அவர் முக்கியமானவராக உள்ளார்.
எனவே அவரின் நியமனம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியை பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் அது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் ஆட்சியில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவ்சங்கர் மேனன், இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் பாதுகாப்பு பிரச்சினை என்பவற்றில் முக்கிய பங்கை ஆற்றினார்.
டொவால், 1968 ஆம் ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளாவில் பணியில் சேர்ந்தார்.
1988 ஆம் ஆண்டு இந்தியாவின் கிர்த்தி சக்கர என்ற இரண்டாவது பெருமைக்குரிய விருதை பெற்ற முதல் பொலிஸ் அதிகாரியாக கருதப்படுகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhtz.html
மலேசியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம்! கொலை என சந்தேகம்!
[ சனிக்கிழமை, 31 மே 2014, 03:26.05 AM GMT ]
மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணித்தமை தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த 24ம் திகதி மலேசியாவில் விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் விபதுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்தவச்செல்வன் சச்சுதன் என்பவரே வாகன விபத்தில் உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் சுமார் 4 வருட காலமாக மலேசியாவில் தொழில் புரிந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று அவருடைய உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது இதன் போது அவருடைய மனைவி கருத்து தெரிவிக்கையில்,
தனது கணவன் கடந்த ஒரு வருடத்துக்கு முதல் தான் அவுஸ்திரேலிய செல்வதற்காக ஒரு தரகரிடம் இலங்கை பணம் 8 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதற்க்கு பணம் தேவை, பணத்தை தனது கணக்குக்கு போடும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.
அதன் படி மனைவியும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தரகர்கள் அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி இவரை ஏமாற்றி உள்ளனர்.
இதன் காரணமாக இறந்தவருக்கும் தரகருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தனக்கு கணவன் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.
இவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்படுள்ளது என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZht2.html
புலிச் சந்தேகநபர் எனக் கூறப்படுபவரின் கடவுச் சீட்டை தூதரக அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்?
[ சனிக்கிழமை, 31 மே 2014, 03:37.25 AM GMT ]
காலாவதியான கடவுச் சீட்டை இலங்கைத் தூதரக அதிகாரிளிடம் வழங்கி புதுப்பித்துக் கொண்டதாக குறித்த புலிச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவு இரண்டாம் நிலைத் தலைவராக கருதப்படும் குசாந்தன் எனப்படும் முள்ளிச்செல்வம் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடவுச் சீட்டை புதுப்பித்துக் கொடுத்த தூதரக அதிகாரிகள் குசாந்தனை அடையாளம் காணவில்லை என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே குசாந்தனை கைது செய்துள்ளனர்.
கடந்த 15ம் திகதி குசாந்தன் உள்ளிட்ட மூன்று பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்ததுடன், கடந்த 25ம் திகதி இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
குறித்த மூன்று பேரிடமும் பயங்கரவாதத் தடைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZht3.html
Geen opmerkingen:
Een reactie posten