தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு எதிராக இந்தியா பிடிவிராந்து

சம்பூர் அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
[ புதன்கிழமை, 28 மே 2014, 04:20.05 PM GMT ]
இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்தின் பணிகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமது 512 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்சார திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறிவித்தது.
எனினும் அந்த பணிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் இன்று குறித்த அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ச, மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
250 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ள இந்த அனல் மின்சார நிலையம் 2018 ம் ஆண்டளவில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது..
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZir0.html

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு எதிராக இந்தியா பிடிவிராந்து
[ புதன்கிழமை, 28 மே 2014, 04:43.38 PM GMT ]
மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு எதிராக இந்தியா பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் கியூ பிரிவு பொலிஸாருக்கு இந்த பிடிவிராந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் பாகிஸ்தான் உளவுப் பிரிவுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முஹமட் ஹுசைனி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 14ம் திகதி ஹுசைனியை மலேசிய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவரிடம் விசாரணை நடாத்த இந்திய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு மலேசியாவிடம் இந்திய அதிகாரிகள் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
தமிழக பொலிஸார் குறித்த சந்தேக நபரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZir2.html

Geen opmerkingen:

Een reactie posten