மோடி கூறுவது போல் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது!- அருண் தம்பிமுத்து
[ வெள்ளிக்கிழமை, 30 மே 2014, 09:01.04 PM GMT ]
தேசிய மீனவக்கூட்டுறவின் அழைப்பாளர் அந்தனி ஜேசுதாசன் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற கையெழுத்து திரட்டல் போராட்டத்தின்போது வடக்கில் இந்திய மீனவர்கள் அத்துமீறல் மீள்குடியேற்றம் காணி சுவீகரிப்பு மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது
இதன்போது கருத்துரைத்த ஜேசுதாசன் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பேச்சுவார்த்தை வெற்றிப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்
இந்த விடயத்தில் இணக்கம் இன்மை காரணமாகவே அண்மையில் இடம்பெற்ற இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தோல்விக்கண்டதாகவும் ஜேசுதாசன் கூறினார்!!
http://www.tamilwin.com/show-RUmsyFQULZhsz.html
மோடி கூறுவது போல் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது!- அருண் தம்பிமுத்து
[ வெள்ளிக்கிழமை, 30 மே 2014, 11:31.53 PM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் பாரதூரமான பிரச்சினை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து நேற்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதை முழு கிழக்கு மாகாண மக்களும் எதிர்க்கின்றனர்.
அது கிழக்கு மாகாண மக்களுக்கு அவசியமில்லை எனவும் அருண் தம்பிமுத்து கூறியுள்ளார்.
இந்தியா, இந்நாட்டின் மீது பலவந்தமாக திணித்த 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள கிழக்கு மக்கள் தயாரில்லை.
அதனை அமுல்படுத்தினால் கிழக்கு மக்களுக்கே கடும் அநீதி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்த அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலில் அருண் தம்பிமுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFQULZhs1.html
Geen opmerkingen:
Een reactie posten