தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

படகு அகதிகளின் இலக்கு நியூஸிலாந்தா? அனுமதிக்க முடியாது!- பிரதமர் ஜோன் கீ

77 புலிச் சந்தேக நபர்கள் கைது!
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 02:52.05 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள இயங்கச் செய்வது தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் 77 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி முதல் இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 47 பேர் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவர்களில் ஆறு பேர் பெண்களாவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பாரியளவில் போதைப் பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjv5.html
படகு அகதிகளின் இலக்கு நியூஸிலாந்தா? அனுமதிக்க முடியாது!- பிரதமர் ஜோன் கீ
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 11:42.43 PM GMT ]
படகு அகதிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் எல்லைப்புறத்தில் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து மனித கடத்தல்காரர்கள் நியூஸிலாந்தை குறிவைப்பதாக நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய இடங்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோர் தற்போது கென்பராவின் சாப்ம்டவுனை குறிவைப்பதாக கீ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நியூஸிலாந்துக்கு வரும் படகு அகதிகள் எவருக்கும் இலகுவான பயணம் அமையாது என்று கீ எச்சரித்துள்ளார்.
நியூஸிலாந்து எவரையும் பின்கதவால் அனுமதிக்காது என்றும் ஜோன் கே தெரிவித்துள்ளார்.
எனினும், நியூஸிலாந்து நிபந்தனைகளுடன் புலம்பெயர் பணியாளர்களை வரவேற்கிறது என்று கீ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjxy.html

Geen opmerkingen:

Een reactie posten