தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி சுபின் இரானி மத்திய மனிதவளத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அருகில் உள்ள மூத்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியிடம் ஏதோ கதைக்க மற்பட்டது ஊடகங்கின் கவனத்தை ஈர்த்துள்ளது
தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி சுபின் இரானி அமைச்சரானார் இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே 26ம் திகதி மாலை பதவியேற்றது.
புதிய அமைச்சரவையில், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய மனிதவளத் துறைக்கு புதிய அமைச்சராக, 38 வயதே நிரம்பிய ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசில், அர்ஜுன் சிங், கபில் சிபல் மற்றும் பல்லம் ராஜு போன்ற ஆண்களே மனிதவளத்துறை அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களெல்லாம் வயது முதிர்ந்தவர்கள். ஆனால், இப்போது, நாட்டின் மிக முக்கியமான துறைக்கு, 40 வயதைக்கூட தொடாத ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்மிருதியின் அரசியல் பயணம் 2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்துகொண்ட போதுதான் ஆரம்பித்தது. இவர் அமேதி தொகுதியில் காங்கிரசின் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு சுமார் 3 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய அழகிப் போட்டியில் இவர் பங்கேற்றிருந்தபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten