தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

வவுனியா கல்மடு ம.வி கலைப்பிரிவு மாணவனை காணவில்லை!

வீடு ஒன்றில் கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது
[ புதன்கிழமை, 28 மே 2014, 09:27.27 AM GMT ]
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்; உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தைக் கொள்ளையிட்ட மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
கல்முனைக்குடி தைக்கா நகர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான இன்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் போது வீட்டை திறந்து வைத்துள்ள நிலையில் கொள்ளையர் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையிட்ட போது வீட்டின் உரிமையாளர்கள் கொள்ளையனைக் கண்டு சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் கொள்ளைரை மடக்கிப் பிடித்தது நையப்புடைப்பு செய்தனர்.
இதனையடுத்து 119 பொலிஸ் அவசர சேவைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் கொள்ளையரை கைது செய்து விசாரணையின் போது அவர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 40 வயதுடைய சாய்ந்தமருதைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZip5.html


வவுனியா கல்மடு ம.வி கலைப்பிரிவு மாணவனை காணவில்லை!
[ புதன்கிழமை, 28 மே 2014, 10:38.39 AM GMT ]
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன் எனும் 17 வயதுடைய மாணவன் நேற்று (27.05.2014 அன்று) காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த 27.05.2014 அன்று தரணிக்குளம் சாஸ்திரி கூழாங்குளம் எனும் முகவரியில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து, அதிகாலை 5.00 மணிக்கு பத்து கிலோ பயிற்றங்காய்களுடன் புறப்பட்டு, வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தையில் வியாபாரியிடம் கொடுத்த பின்னர், தான் பயணித்த மிதிவண்டியை குறித்த வியாபாரியின் மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி விட்டு, எதிர்ப்புறமாகவுள்ள காகிதாதிகள் (பாடசாலை உபகரணங்கள்) விற்பனை நிலையத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தரணிக்குளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமும் மாணவனின் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZiqy.html

Geen opmerkingen:

Een reactie posten