தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

மக்கள் பிரதிநிதிகளுக்கும் மதிப்பற்ற இராணுவ ஆட்சிக்குள் விழுகின்றது தமிழர் நிலம்! பா.உறுப்பினர் சிறீதரன்



தமிழர் தாயகத்தில் நடைபெறுவது படையாட்சி: த.தே.ம.முன்னணி
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 12:45.00 PM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலத்தை விடுவிப்பதற்கான போராட்டம் என இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கும் கருத்திற்கு அக்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் நடைபெறுவது ஐனநாயக ஆட்சி அல்ல, ஒரு படையாட்சி என்பதை இராணுவப் பேச்சாளரின் கருத்து புலப்படுத்துவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அக்கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நிலத்திற்காகவே போராட்டம் நடத்தியதாகவும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். அவருடைய இந்தக் கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனவும்,  அவர்களை மக்கள் முழுமையாக ஆதரிக்கவில்லை.
எனவே அவர்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையாகவே போரை நாங்கள் நடத்தினோம் என கூறும் படையினர் மற்றும் இலங்கை அரசாங்கம் புலிகள் பயன்படுத்தினர் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு மக்களுடைய நிலத்தை ஆக்கிரமிப்பது எவ்வகையில் நியாயமானதாக அமையும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகா கைது செய்யப்பட்டதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் வீடும் படையினரால் முற்றுமுழுதாக முற்றுகையிடப்பட்டது.
எனவே இவ்வாறான சம்பவங்கள் எதற்காக நடத்தப்படுகின்றன என்றால் உண்மையில் மக்களுடைய நிலங்களை தாம் ஆக்கிரமித்திருக்கும் விடயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே.
அவ்வாறு மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் நிலையில் மக்கள் அதற்கு எதிராக கிளம்புகின்றபோது அவர்களை புலிகள் என்றும். அவர்கள் கேட்பது புலிகளுடையது என்பதும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பழக்கப்பட்ட ஒரு விடயமாகவே மாறியிருக்கின்றது. எனவே படைத்தளபதியின் நேற்றய கூற்றுத் தொடர்பாக நாங்கள் எமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
மேலும் அவருடைய கருத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் காரணம் என்னவென்றால் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்கள் முழுவதற்கும் பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்றய தினம் வழங்கிய செவ்வி சென்றடைந்திருக்கின்றது.
எனவே மிகமோசமான பொய்களை படைத்தளபதி கூறிக்கொண்டிருப்பதை நாங்கள் வெளிப்படையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiwz.html
மக்கள் பிரதிநிதிகளுக்கும் மதிப்பற்ற இராணுவ ஆட்சிக்குள் விழுகின்றது தமிழர் நிலம்! பா.உறுப்பினர் சிறீதரன்
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 11:22.03 AM GMT ]
வடக்கு கிழக்கில் அண்மைக்காலமாக நிலவிவரும் அமைதியற்ற தமிழர்களின் வாழ்வு நிலை தொடர்பாக சர்வதேசத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதன் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு..
போர் முடிக்கப்பட்டதாகவும் வடக்கு கிழக்கில் ஒரு சுமுகநிலை நிலவுவதாக கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சொல்லி வருகின்றது.ஆனால் இந்தக்காலத்தில் அதற்கு மாறான நிகழ்வுகளே தமிழர் வாழுகின்ற பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றது.
இன்று வடக்கு கிழக்கில் மிகமோசமான அளவில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவருகின்றது.வடக்கு கிழக்கில் பல தேர்தல்கள் நடைபெற்று அதன் மூலம் தமிழர்கள் அரசாங்கத்திற்கு மிகதெளிவாக ஒரு சேதியை சொல்லி இருக்கின்றார்கள்.
தமிழர்கள் தமது அபிலாசைகளை முழுமையாக தமிழ் தேசியத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ததன் மூலம் தமது அடிமனதில் உள்ள தேவைப்பாட்டை அடித்துரைத்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த மக்களின் ஜனநாயக தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கம் போர் காலத்தில் இருந்தது போலவே ஒரு உத்தியோகப்பற்ற இராணுவ ஆட்சியையே வடக்க கிழக்கில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கடந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ்மக்கள் தமது உச்ச பட்ச ஜனநாயக தீர்ப்பை எழுதிய பின்பும் அரசாங்கம் தனது தான்தோன்றித்தனமான செயல்களிலேயே ஈடுபட்டு வருகின்றது. வடமாகாண சபையின் நிர்வாகங்களில் இராணுவம் தலையிட்டு வருகின்றது.
இதன் காரணமாக தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மதிப்பற்றவர்களாக அவமதிக்கப்படுகின்றார்கள். அண்மைக்காலமாக இராணுவத்தால் செய்யப்பட்டுவரும் சுற்றிவளைப்புகள் கைதுகள் என்பவற்றுக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 28ம் நாள் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் வீடு இராணுவத்தால் அதிகாலை தொடக்கும் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட நிலை உருவாகியுள்ளது.வடமாகாண சபை உறுப்பினர் எனத் தெரிந்தும் அவரின் அடிப்படை உரிமைகள் இராணுவத்தால் மீறப்பட்டிருகின்றது.
இதுபோல அமைச்சர் ஜங்கரநேசனுக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் குடிமக்களுக்கு என்ன இங்கு நேர்கின்றது என்பதை சர்வதேசம் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையான சூழல் தமிழர் வாழும் பகுதிகளில் தற்போது நிலவுகின்றது.
முழுமையான ஜனநாயக மறுப்புச் சூழலுக்குள் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கை இராணுவம் உட்படுத்தி வருகின்றது. இது கண்டனத்திற்குரியது.
தமிழர்கள் தற்போது முழுமையாக தமது நிம்மதியை இழந்திருக்கின்றார்கள். அவர்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எப்போதும் வீடுகள் சுற்றிவளைக்கப்படலாம் எவரும் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
வடக்கு கிழக்கு முழுமையான இராணுவ மயமாக்கலுக்குள் சென்று கொண்டிருப்பதை சர்வதேச சமுகம் கவனத்தில் எடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழர்கள் உரிமைகளுடன் கூடிய அமையான சுதந்திரமான வாழ்வு வாழ வழயமைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiv5.html

Geen opmerkingen:

Een reactie posten