தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

யாழ்.மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு: த.தே.கூட்டமைப்பு வெளிநடப்பு!


கோத்தபாயவுக்கு எதிராக பொன்சேகா வழக்கு
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 08:34.31 AM GMT ]
2009ம் ஆண்டு போர் வெற்றிக்கு பின்னர், அரசாங்கத்தினால் தனக்கு சன்மானமாக கொடுக்கப்பட்ட காணியை நகர அபிவிருத்தி அதிகாரச் சபை தன்னிச்சையாக சுவீகரித்துள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எவ்விதமான அறிப்பையும் செய்யாது, இழப்பீடுகளை வழங்காது, கொழும்பு கிரிமண்டல மாவத்தையில் உள்ள தனது காணியை நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு சுவீகரித்துள்ளதாக பொன்சேகா மனுவில் கூறியுள்ளார்.
2009ம் ஆண்டு போர் வெற்றியின் பின்னர், முப்படையினருக்கு காணிகளை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பொன்சேகாவுக்கு இந்த காணி வழங்கப்பட்டது.
இது தொடர்பில் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், மனுவுக்கு எதிரான எதிர்த்தரப்பு மனுவை ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் காணி அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு: த.தே.கூட்டமைப்பு வெளிநடப்பு
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 06:59.44 AM GMT ]
யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றபோது, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்து கோரிக்கை விடுத்தனர்.
எனினும், நினைவு தினம் அனுஷ்டிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்புச் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில், முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதித்த மாநகரசபை மேயர், 1983ம் ஆண்டிலிருந்து படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படுவதாயின் அனுமதிக்க முடியும் என கூறினார்.
எனினும் அவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டால் கொல்லப்பட்ட துரோகிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்தியதாக அர்த்தப்படும். அவ்வாறான ஒரு கொள்கைக்காக தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.
சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்க்கட்சி இன்றிய நிலையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten