புலிகள் மீள இணைகின்றனர் என்ற மகிந்த சகோதரர்களின் நாடகத்தில் உச்சக்கட்டமாக பிறந்து எழு மாதங்களே ஆனா ஒரு ஆண் குழந்தையும் இளம் பெற்றோரும் கடந்த 2014/05/03 அரச புலனாய்வுப் பிரிவினரால் கட்டுனாயக்க விமான நிலையத்தில் இரகசியமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இரவீந்திரன் ரேகன் 25 வயது ரேகன் சுபானி 26 வயது ரேகன் ஆரோன் ஏழுமாதங்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவல்களை அவர்களது குடும்பத்தினருக்கோ உரித்துடையோற்கோ வழங்காது, மாறாக இரகசியம் காக்குமாறும் படைப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியும் உள்ளனர் இதனால் அவர்களது குடும்பத்தினரோ உறவினர்களோ தகவல்களை வெளியிடாது மௌனம் காத்துவருகின்றனர்.
புலிகளுடனான யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன புலிகள் போராடிய காலத்தில் குழந்தைகளாகவும் பதின்மவயதினராகவும் இருந்தவர்களை இப்போது புலிகளை மீளிணைக்கும் தலைவர்களாக சித்தரித்து கைது செய்து காணாமல் போகச் செய்யும் செயல்பாட்டினை அரசும் அரசபடையினரும் மேற்கொண்டுவருகின்றனர். இதன் அகோர நிலையாக அண்மையில் ஒரு இளம் கற்பிணித்தாய் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது கருச்சிதைவு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தமையும் தபோது எழுமாத குழந்தை கைது செய்யப்பட்டதும் எதோ ஒரு தகவலை தமிழர்களுக்கு அரசு தெரிவிப்பதாக ஊகிக்க முடிகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten