தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

இலங்கை விவகாரங்களை கையாள விசேட பிரதிநிதி: மோடி நடவடிக்கை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் நாட்டுக்கு அழைக்கவுள்ளார் ஜெ?
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 04:37.50 PM GMT ]
தம்மை சந்திப்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் ஊடகம் ஒன்று இதனை இன்று தெரிவித்தது.
ஈழத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப் பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஜெயலலிதா ஜெயராம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiw7.html
இலங்கை விவகாரங்களை கையாள விசேட பிரதிநிதி: மோடி நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 29 மே 2014, 04:23.31 PM GMT ]
இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்த பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்கினை வகிக்கிறது.
இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு தம்மிடம் உள்ளது என்பதை நரேந்திர மோடி உணர்ந்துக் கொண்டுள்ளார்.
அதனை தாம் நேரடியாக கையாளும் வகையில், விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது, இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக பார்த்தசாரதியை விசேட பிரதிநிதியாக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRdLZiw5.html

Geen opmerkingen:

Een reactie posten