கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சிரியாவிலிருந்து அகதிகளாக உள்ளவர்களின் எண்ணிக்கையானது 2.4 மில்லியன் எனவும் அவற்றுள் 100,000 மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும்படி அங்கத்துவ நாடுகளைக் கேட்டிருந்தது. இந்த எண்ணிக்கையை விட 30,000 பேரையும் ஏற்றுக்கொள்ளும்படி அங்கத்துவ நாடுகளைக் கேட்டிருந்தது.
கனடா கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1,300 சிரிய அகதிகளை, UN ன் முகாம்களில் தங்கியிருக்கும் 200 பேர் உட்பட ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருந்தது. இவர்களைத் தவிர ஸ்பொன்சர் முறையில் 1,100 சிரிய அகதிகளை ஏற்றுக்கொள்ளவும் கனடா சம்மதம் தெரிவித்திருந்தது.
2014ம் வருடம் முடிவதற்குள் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முயல்வதாக குடிவரவு அமைச்சரான Chris Alexander ன் பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். அதே நேரம் குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாகப் பேசுவதற்காக UN High Commissioner for Refugees Antonio Guterres கனடா வந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
அதே நேரம் பாராளுமன்ற நிர்வாகக் குழுவானது கடந்த கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்க்கட்சிகள் கனடிய அரசினை சிரிய அகதிகளுக்காகக் கதவினை அகலத் திறக்கும்படியும் இவ்வாறு வேறு நாடுகளான Hungary, Vietnam, Uganda and Kosovo போன்ற அகதிகள் முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிவந்திருக்கின்றது.
ஆனால் New Democrats and Liberals ம் இதுவரையில் எவ்வளவு சிரிய அகதிகளைக் கனடா ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளதென்றோ அல்லது குடிவரவுத் திணைக்களம் ஓப்புக்கொண்ட தொகையில் இதுவரை எவ்வளவு பேருக்கு அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டதென்றோ வெளியிடவில்லை
- See more at: http://www.canadamirror.com/canada/26688.html#sthash.czhJw8mJ.dpuf
Geen opmerkingen:
Een reactie posten