தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 mei 2014

வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகளை அபகரிக்கும் கறுப்பு சட்டைக் காரர்கள் !


யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக கள்ளக் காணிகள் எழுதிக் கொடுக்கும் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. கடந்த கால அனர்த்தங்களினால் அனைத்தையும் இழந்து தத்தளிக்கும் தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ளது, இந்த நிலங்களே. அதனையும் தற்போது யாழ்ப்பாண வக்கீல்கள் அதிகூடிய பணத்துக்காக கள்ள உறுதி எழுதிக் கொடுக்கின்றனர். இறந்தவர்களின் காணிகள், வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகள் மற்றும் இங்குள்ளவர்களை நன்கு அறிந்து, அவர்கள் நீதிமன்றத்தை நாடக் கூடியவர்களா? அவ்வளவுக்கு அவர்களிடம் பணப்புழக்கம் உள்ளதாக என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களிடம் இருக்கும் காணிகளை களவாக உறுதி எழுதி அதிக பணம் வாங்கும் கலாசாரம் மேலோங்கி வருகின்றது என அறியப்படுகிறது.

யாழ்.நகர்ப் பகுதியில், வயோதிப மாதுவின் காணியும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்க முற்பட்ட அந்த வயோதிப மாது கட்டி வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் அண்மையில் நடந்தேறியுள்ளது. மேலும் இவ்வாறு காணிகள் பொய்யான உறுதிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே காணியை வைத்திருப்பவர்களும் சரி அதனை வாங்குபவர்களும் சரி, நன்றாக கவனித்து பார்த்து செயல்படுவது நல்லது. குறிப்பாக புலம்பெயர் மக்கள், தமது காணிகளை அப்படியே தான் இருக்கிறதா ? என்பதனை அவதானிப்பது நல்லது.

Geen opmerkingen:

Een reactie posten