இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி , அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இதனை கூறியுள்ளது.
பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், பொலிஸ் திணைக்களம் முற்றாக வீழ்ச்சியடையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகாரத்தை மாகாணங்களுக்கு பரவலாக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் மேற்படி தனது முடிவை இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZht7.html
Geen opmerkingen:
Een reactie posten