தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 mei 2014

சுஷ்மா சுவராஜின் நியமனத்தை பேதமின்றி வரவேற்றுள்ள இலங்கை அரசியல் தலைவர்கள்

இராவணா பலய பௌத்த சாசன அமைச்சுக்குள் உள்ளிருப்பு போராட்டம்
[ புதன்கிழமை, 28 மே 2014, 08:13.45 AM GMT ]
சமயங்கள் சம்பந்தமான சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு எதிராக இராவணா பலய, பௌத்த சாசன அமைச்சுக்குள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இராவணா பலய அமைப்பின் பிக்குகள் அமைச்சுக்குள் புகுந்து அங்கு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சின் அதிகாரிகளிடம் பேசிய இராவணா பலய அமைப்பினர், புதிய பொலிஸ் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என கோரினர்.
பிக்குமாரின் கோரிக்கை குறித்து அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அரசாங்கம் தரும் பதிலின் அடிப்படையில் முடிவை எடுப்பதாக அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெரும்பாலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மைய காலத்தில் நடந்த சம்பவங்களை தொடர்ந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த புதிய பொலிஸ் பிரிவை ஏற்படுத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZip3.html
சுஷ்மா சுவராஜின் நியமனத்தை பேதமின்றி வரவேற்றுள்ள இலங்கை அரசியல் தலைவர்கள்
[ புதன்கிழமை, 28 மே 2014, 08:37.36 AM GMT ]
இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளதை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் இன மற்றும் கட்சி பேதமின்றி வரவேற்றுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் நியேமால் பெரேரா,
சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் அனைத்து கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை வந்திருந்தார்.
அவர் சர்வதேச உறவுகள் தொடர்பான விடயத்தில் பரந்த அறிவை கொண்டுள்ளவர் என்று கூற முடியும். அவர் வெளிவிவகார அமைச்சர் பதவியில் சிறந்த முறையில் பணியாற்றுவார்.
அவரது பாத்திரம் இந்தியாவுக்கு மாத்திரமல்லாது முழு தெற்காசியாவுக்கும் சிறந்த பலனை கொண்டு வரும் எனவும் நியோமல் பெரேரா கூறியுள்ளார்.
அதேவேளை சுஷ்மா சுவராஜ், துறையை கையாளக் கூடிய போதுமான திறனை பெற்றவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
எனினும் சுராஜ் தொடர்பில் கூட்டமைப்புக்கு ஒரு மனக்குறை இருந்தது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என கூட்டமைப்பை கோரியிருந்ததுடன் அது பயன் தரக் கூடியதாக இருக்கும் எனவும் சுஷ்மா விளக்கியிருந்தார்.
இதனிடையே சுஷ்மா சுவாராஜ் இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஒரு நம்பிக்கையின் ஆதராம் எனவும் இலங்கை தொடர்பில் அவருக்கு அனுபவங்கள் இருப்பதாகவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை உறவுகளில் அவர் ஒரு நேர்மையான பங்கை வகிப்பார். 2012 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அறிறுத்தியிருந்தமை முஸ்லிம் காங்கிரஸூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே சுஷ்மா சுவராஜ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஒரு பெரிய விடயம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் விபரித்தார்.
அவரது பதவிக்காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் கொள்கையில் வெளிவிவகார அமைச்சு உறுதியாக இருக்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு அவர் இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு தனது வாதத்திற்குள் இருக்க முடியாது போனது எனவும் யோகராஜன் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை சுஷ்மா சுவராஜ் தனது இலங்கை விஜயத்தின் போது அரச தலைவர்களுடன் சிறந்த உறவுகளை கட்டியெழுப்பியிருந்தாக சிங்கள தேசிய வாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழ் பிரதேசங்களில் சிவில் கடமைகளில் இருந்து இராணுவம் நீக்கப்பட வேண்டும் எனவும் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZip4.html

Geen opmerkingen:

Een reactie posten