தென் ஆபிரிக்க தீர்வுத் திட்டம் கைவிடப்படவில்லை
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்க தீர்வுத் திட்டம் கைவிடப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. தென் அபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையிலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தென் ஆபிரிக்காவில் பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இலங்கை தொடர்பான விவகாரங்களில் தென் ஆபிரிக்கா கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/68867.html
தடையைத் தாண்டினார் நவிபிள்ளை
சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெற்றி பெற்றுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தவாரம், இந்த முயற்சிகளில் மற்றொருபடி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைகளுக்குத் தேவையான நிதியை, தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தநிலையில், இம்மாத இறுதியில், இந்த விசாரணைக்குழுவை அமைப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அவர் ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி மூலம் தெரியப்படுத்தவுள்ளார்.
அதையடுத்து, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையின் உருவாக்கம் மற்றும் அதற்கான நிபந்தனைகள் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/68870.html
Geen opmerkingen:
Een reactie posten