தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர். வான் படை, புலனாய்வு பிரிவு, பிரசார பிரிவு ஆகியவற்றை சேர்ந்த ஒவ்வொருவரே மலேசியாவின் பயங்கரவாத ஒழிப்பு விசேட பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் கடந்த 15 ஆம் திகதி சிலாங்கூர் பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து பிடிக்கப்பட்டனர்.
புலிகளின் வான் படை ஸ்தாபகர் கேணல் சங்கர். சங்கரின் மகள் மலேசியாவில் படிக்கின்றார். சங்கரின் மகளுடைய கணவனே குசந்தன். ஆயினும் இத்தம்பதி நான்கு வருடத்துக்கும் மேலாக பிரிந்து வாழ்கின்றனர்.
குசந்தன் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற விமானி. வெளிநாட்டில் இப்படிப்பை படித்தவர். புலிகளின் வான் படையை கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்ட இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவர். வன்னியில் புலிகளின் விமானங்கள் பறந்து திரிந்தபோது பங்களிப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கின்றார். மலேசியா சென்ற பிற்பாடு இவர் மெதுமைப் போக்குடன் நடந்து இருக்கின்றார்.
ஏனைய இருவரில் ஒருவர் பொட்டம்மானின் நெருங்கிய சகா ஆவார். மற்றவர் நிதர்சனத்தில் சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்த்தவர். புலிகளின் சர்வதேச வலையமைப்பை சேர்ந்த இன்னும் ஏராளமானோர் இவர்களின் கைதை தொடர்ந்து பிடிக்கப்படலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/70656.html
Geen opmerkingen:
Een reactie posten