தேசிய தலைவர் குடும்பம் வழிபட்ட கோவிலில் நாமால் ராஜபக்ஷ வழிபாடு !
28 May, 2014 by admin
இதேவேளை இந்த ஆலயத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருவிழா தொடர்பில் ஆலய பரிபாலன சபையினருடன் நாமல் ராஜபக்ஷ கலந்தாலோசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி, வடக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரும் நாமல் ராஜபக்ஷவுடன் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் நடக்கும் விசேஷங்களை கூட இவர்கள் விட்டுவைப்பதாக தெரியவில்லை.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6894
சந்தித்த முதல் நாளே கடுமையான தொணியில் மோடி பேசினார்: டெல்லி வட்டாரங்கள் !
28 May, 2014 by admin
இன் நிலையில் தான் மகிந்தரும் சிக்கிக்கொண்டார். மகிந்தர் மற்றும் மோடியின் சந்திப்பு சுமார் 20 நிமிடம் வரை நீடித்ததாகவும், அது சுமூகமாக நடைபெறவில்லை என்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மகிந்தரை மோடி சந்தித்த மறு நிமிடமே மீனவர்கள் கைது மற்றும் காணமல் போவது தொடர்பாக அவர் பேச ஆரம்பித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் மகிந்தர் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார். இதேவேளை 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் மோடி உடனடியாகவே மகிந்தருடன் பேசியுள்ளார். மகிந்தர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு, உலக அரசியல் தெரியாது என்று மகிந்தர் ஒருவேளை தப்புக்கணக்கு போட்டிருக்கலாம்.
ஆனால் மோடி ஈழத் தமிழர்கள் தொடர்பாக பல விடையங்களை மகிந்தருடன் சம காலத்தில் கலந்துரையாடியுள்ளார். அத்தோடு மிக இறுக்கமாக தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. இருப்பினும் இந்த ஒன்றுக்கும் உதவாத 13 வது திருத்த சட்டம் தொடர்பாக மோடி கொண்டுள்ள அபிப்பிராயத்தை, ஈழத் தமிழர்கள் நிச்சயம் மாற்றுவார்கள். இதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் நிச்சயம் உதவவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6895
Geen opmerkingen:
Een reactie posten