அரசியலுக்கு வர ஆசைப்படும் கோட்டா! கொழும்பில் போட்டியிடுவாராம்..
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்தால் அரசியலுக்கு வருவராம் அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ. அப்படி வந்தால் கொழும்பில்தான் தேர்தலில் குதிப்பாராம்! – இதனை அவரே தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
ஆனால் அரசியலுக்கு வருமாறு ஜனாதிபதி என்னைப் பணித்தாரானால் நான் அரசியலுக்கு வருவேன். நான் நாட்டுக்கு என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மக்கள் அங்கீகாரமளிப்பார்கள். நான் அரசியலுக்கு வருவது நாட்டுக்குத் தேவை எனக் கருதி ஜனாதிபதி என்னை அழைப்பாராயின் அதற்குப் பின் நிற்கமாட்டேன். நாட்டுக்கு எந்த வகையில் நான் பணியாற்றுவது பொருத்தமானது என ஜனாதிபதி கருகின்றாரோ அந்த வகையில் நான் பணியாற்றுவேன்.
என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை நான் செவ்வனே நிறைவேற்றியமை போல எதிர்காலத்திலும் எனக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நான் தொடர்ந்து நிறைவேற்றுவேன். அரசியலுக்கு வருவதானால் நான் ஹம்பாந்தோட்டையில் குதிக்கமாட்டேன். கொழும்பில்தான் நான் இப்போது வசிக்கிறேன். இங்கிருந்துதான் அரசியலுக்குள் நுழைவேன். எனது குடும்பம் அரசியலில் இருபத்தியைந்து வருடங்களுக்கு மேல் பொறுப்பான பணிகளை ஆற்றியிருக்கின்றது.
நான் அரசியலுக்கு வருவதால் ராஜபக்ஷகளின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்றோ, அது தவறு என்றோ கூறமாட்டேன். அமெரிக்காவில் கென்னடி பரம்பரை, இந்தியாவில் நேரு தலைமுறை என்றெல்லாம் அரசியலில் இல்லையா? அது போன்றதுதான் இதுவும். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதியரசர்தான்; கல்வி கற்றவர்தான். ஆனால் இப்போது அவர் திறமையானவராகச் செயற்படவில்லை.
சிறந்த நிர்வாகியாகச் செயற்படவில்லை. அவர், அதிக அழுத்ததுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைவாதத்துக்குள் அழுந்திப் போயிருக்கின்றார். மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகாரங்கள் அவருக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பிரயோகித்து நிறைவேற்றும் திறமையற்றவராகவே அவர் உள்ளார். – இத்தகைய சாரப்பட அந்தப் பேட்டியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார் கோட்டாபய ராஜபக்ஷ.
http://www.jvpnews.com/srilanka/71337.html
இரணைமடு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள்! டக்ளஸிடம் கோரிக்கை
“ஐந்து வருடங்களுக்கு இரணைமடுக் குடிநீர் விநியோகத் திட்டத்தை நிறுத்துமாறும், இக்காலப் பகுதியில் விவசாயிகளின் தேவைக்கு அதிகமாக குளத்தில் நீர் இருக்குமானால் விநியோகத் திட்டத்தை அமுல்படுத்துங்கள்.
நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர் இரணைமடுக்குள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாம் நாள் கூட்டம் தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதற்குமுன்னதாக அமைச்சர், இரணைமடுக்குளம் விவசாய அமைப்புப் பிரதிநிதிகளை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை கிளிநொச்சியிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் அலுவலகத்தில் நடத்தியிருந்தார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸிடம் குடிநீர் விநியோகத்திட்டத்தை நிறுத்துமாறு கேட்டனர்.
அத்துடன் இரணைமடுக்குளத்தில் உள்ள நீர், தங்களின் விவசாயத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை என்றும், இத்திட்டத்தை முற்றாக நிறுத்த முடியாது போதிலும் குறைந்தது ஐந்து வருடங்களுக்கேனும் ஒத்திவையுங்கள் என்றும் கேட்டனர்.
http://www.jvpnews.com/srilanka/71332.html
Geen opmerkingen:
Een reactie posten