தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 mei 2014

மகிந்தவை சந்தித்துப் பேசினார் மோடி: இனப்பிரச்சினை, மீனவர் விவகாரம் குறித்து கலந்துரையாடல்!

யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை மாயம்
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 07:14.56 AM GMT ]
யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
நேற்றுக் காலை தொண்டைமானாறு காட்டுப்புலம் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையென சகோதரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjt7.html

மகிந்தவை சந்தித்துப் பேசினார் மோடி: இனப்பிரச்சினை, மீனவர் விவகாரம் குறித்து கலந்துரையாடல்
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 07:01.41 AM GMT ]
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று முற்பகல் 10.47 மணியளவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை – இந்திய தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதி மகிந்த இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்ததுடன், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களையும் அனுப்பவில்லை.
இரண்டாம் இணைப்பு-
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, இலங்கை - இந்திய மீனவர் சிக்கலுக்கு இணக்கமான உடன்பாடு ஆகியவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய விடயங்களைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் புதிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று முற்பகல் இந்தியப் பிரதமருடன் சுமார் 20 நிமிட நேரம் நேரடியாகப் பேசினார். அப்போதே இந்த விடயங்களை இந்தியப் பிரதமர் தெளிவாகத் தெரிவித்தார்
ஹைத்ராபாத் மாளிகையில் இடம்பெற்றதாக இந்தச் சந்திப்பின்போது,இலங்கை இந்திய உறவுகளை புதிய அணுகுமுறையுடன் முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இச்சந்திப்புத் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜதா சிங் தெரிவிக்கையில்,
சார்க் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இருதரப்பு உறவுகள், வர்த்தகம், உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் விவாதித்தார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, தமிழர் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்துமாறும், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது சட்டதிருத்த பிரிவை அமுல்படுத்துமாறும் பிரதமர்  வலியுறுத்தினார்.
அதே சமயம் இலங்கை உடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இந்தசந்திப்பின்போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இலங்கை வர பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததாகவும் சுஜதா சிங் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjt6.html

Geen opmerkingen:

Een reactie posten