[ புதன்கிழமை, 28 மே 2014, 04:22.39 AM GMT ]
மின்னல் தாக்கத்திற்குட்பட்டு இரு வேறு பிரதேசங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், தாயொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மின்னல் தாக்கி சிறுமி மரணம்! தாய் படுகாயம்!- புதுக்குடியிருப்பில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி சிறுமி ஒருவர் மரணமடைந்ததுடன், தாய் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தமிழரசன் உதயகுமாரி (வயது 06) என்ற சிறுமியே இவ்வாறு மின்னல் தாக்கி மரணமடைந்தவராவார்.
இவரது தாயாரான தமிழரசன் சுபாஜினி படுகாயமடைந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த போது நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் தாக்கத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.
மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த மேற்படி தாய் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
அதேவேளை, இச்சம்பவத்தில் மரணமடைந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கி ஒருவர் பலி
திருகோணமலை மாவட்டம் குரங்குபாஞ்சன், மாணிக்கம்பிட்டி பிரதேசத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொல்லிபொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.
சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZio0.html
குருநாகலில் தமிழ் பெண்ணொருவர் கொலை
[ புதன்கிழமை, 28 மே 2014, 03:47.54 AM GMT ]
நேற்று இரவு 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டத்தில் வசிக்கும் மேற்படி பெண் பல வருடங்களாக தனது கணவரோடு பணிபுரிந்து வந்ததாகவும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை குருணாகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண்ணின் உறவினர்களை குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தரவேண்டும்மென பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு குருணாகல் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRcLZioz.html
Geen opmerkingen:
Een reactie posten