வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்கான போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட, சர்ச்சைக்குரிய சிறிலங்கா படை அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன, துருக்கிக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை, சிறிலங்கா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் தமது பொறுப்பை ஏற்பதற்காக சில வாரங்கள் முன்னதாகவே துருக்கிக்கு சென்று விட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த மனிதாபிமான போர் நடவடிக்கையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காகவே பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவுக்கு இந்த இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பாக, இவர் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்பதுடன், வெலிவேரிய சம்பவம் தொடரபாக இராணுவ நீதிமன்ற விசாரணைகளும் நடத்தப்பட்டன.
எனினும், சம்பந்தப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், இராணுவ நீதிமன்றம் தனது பரிந்துரையை அறிவிக்கும். பிரிகேடியர் குணவர்த்தன தனது சாட்சியத்தை வழங்கி விட்டார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
சிறிலங்காவில் தீவிரவாதத்தை வெற்றி கொள்வதற்கு ஆற்றிய பங்களிப்புக்காகவே அவருக்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை சிறிங்கா இராணுவ சட்டப் பணிப்பாளர் ஆராய்ந்து வருகிறார். இராணுவ நீதிமன்ற விசாரணைகள் தேவைப்பட்டால் அதன் பின்னர் முடிவு செய்யப்படும்.
இராணுவ நீதிமன்ற விசாரணை அறிவிக்கப்பட்டால், பிரிகேடியர் குணவர்த்தனவை எந்த நேரத்திலும் திருப்பி அழைக்க முடியும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆற்றிய பங்களிப்புக்காக, பல சிறிலங்கா படை அதிகாரிகள் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/70644.html
Geen opmerkingen:
Een reactie posten