தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 mei 2014

யாழினைத் தொடர்ந்து முல்லையிலும் இராணுவப்பதிவு!

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் டோவல்…

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிக்கு ஒத்தது என்பதும், இந்திய நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்தப் பதவியில் உள்ளவருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியில் இதுவரை இருந்து வந்த சிவசங்கர் மேனன், காங்கிரஸ் அரசு பொதுத் தேர்தலில் தோற்றமையை அடுத்து இராஜினாமாச் செய்தார். டோவலின் நியமனம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றுதான் வெளியானது. எனினும் தமது பணிகளை அவர் கடந்த வாரமே ஆரம்பித்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வாலில் பிறந்த இவர், 1968 இல் கேரளாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 1999இல் இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திக் கொண்டுபோய் ஆப்கானிஸ்தான் கந்தகாரில் இறக்கிய சமயம் பணயக் கைதிகளை விடுவிப்பதற்காகத் தீவிரவாதிகளுடன் இந்திய அரசின் சார்பில் சிரேஷ்ட பேச்சுத் தொடர்பாளராக இவரே செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது விவேகானந்தா சர்வதேச நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.Ajithkumar-Dovel
http://www.jvpnews.com/srilanka/71280.html

யாழினைத் தொடர்ந்து முல்லையிலும் இராணுவப்பதிவு!

யாழ்.குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக இராணுவத்தினர் குடும்பப்பதிவுகளை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திற்கு பெண்களை இணைக்கும் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் எண்ணிக்கை தடுப்பிலிருந்து வந்தவர்கள் உள்ளனரா? குடும்பத்தில் தற்போதுள்ள உள்ளவர்கள் என்ன செய்கின்றனர்? வேறு மாவட்டங்களுக்குச் சென்று வசிப்பவர்களாயின் அவர்கள் எங்கு சென்று வசிக்கின்றனர் போன்ற பல்வேறு விவரங்களை இராணுவத்தினர் பதிவு செய்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே 57 வரையிலான கேள்விகள் அடங்கிய கேள்வி கொத்துடன் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய பதிவுகளை படையினர் முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71283.html

Geen opmerkingen:

Een reactie posten