தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் - லதா செல்கிறார் !

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் விழாவில் அவரது மனைவி லதா கலந்து கொள்கிறார்.
மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார்.
முன்னதாக விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.
இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRaLZjp2.html

Geen opmerkingen:

Een reactie posten