தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

மஹிந்த அழைப்பால் மோடியின் பேஸ்புக், ருவிட்டர் பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்

மஹிந்தரின் இந்திய வருகையை எதிர்க்கும் ஆம் ஆத்மி கட்சி

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்படுவதாகவும், தமிழர்களின் நிலங்களை, அபகரிப்படுவதாகவும், ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் தமிழ் மொழிக்கு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கவும், தமிழர் பகுதிகளில் சிங்களமொழி கட்டாயப்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம், முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும், இலங்கை போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/70583.html

மஹிந்த அழைப்பால் மோடியின் பேஸ்புக், ருவிட்டர் பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெறுகிறது.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதமர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்ச, மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்ஸ பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோடியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது என்றால் அது சமூக வலைதளம் என்றால் அது மிகையாது. அவரது பாணியிலேயே அவருக்கு கருத்து சொல்ல உலகத் தமிழர்கள் முடிவு செய்து மோடியின் பேஸ்புக் பக்கம் மற்றும் ருவிட்டர் கணக்கில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்களாம்.
மோடியின் ருவிட்டர் கணக்கில் கோடிக்கணக்கில் எதிர்ப்பை தெரிவிக்க உலக தமிழர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் அவரின் பேஸ்புக் கணக்கில் பெருமளவு குறுஞ்செய்தி அனுப்பவும் முடிவு செய்துள்ளார்களாம்.modi-Indanmodi-Indan-01

http://www.jvpnews.com/srilanka/70586.html

Geen opmerkingen:

Een reactie posten